இலங்கையிலிருந்து தொடரும் தஞ்சக்கோரிக்கை பயணங்கள்: படகு வழியாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து முயற்சித்த 30 த்திற்கும் மேற்பட்டோர் கைது

இலங்கையில் போர் முடிவுற்று எட்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், அந்நாட்டிலிருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளை நோக்கிய தஞ்சக்கோரிக்கையாளர்களின் பயணங்கள் முற்றுப்பெறவில்லை. இந்த வகையில் கடந்த சில தினங்களில் படகு வழியாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து செல்ல முயற்சித்த 30 த்திற்கும் மேற்பட்டோர் இலங்கையின் புத்தளம் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த நவம்பர் 29 அன்று உடப்பு (புத்தளம் மாவட்டம்) பகுதியில் மூன்று பேர் நியூசிலாந்து செல்ல முயற்சித்ததாகவும், நவம்பர் 30 அன்று சிலாபத்தில் (புத்தளம் மாவட்டம்) இருந்து மீன்பிடி படகு வழியாக ஆஸ்திரேலியா செல்ல முயன்றதாக எட்டு பேரும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், டிசம்பர் 1 அன்று அரச்சிகட்டுவ கடற்கரையில் நியூசிலாந்து செல்ல முயன்றதாக 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒக்கி புயல் காரணமாக நிலவிய மோசமான வானிலையால் இவர்கள் கரை ஒதுங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. 

 2009 ஆம் ஆண்டு இலங்கையில் அந்நாட்டு ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் நடந்த போர் முடிவுற்ற பின், ஆஸ்திரேலியாவிற்கு படகு வழியாக செல்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. இதில் உச்சக்கட்டமாக 2012 ஆம் ஆண்டு 6000 த்திற்கும் மேற்பட்டவர்கள் படகு வழியாக சென்றனர்.  ஈரான், ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு அடுத்தப்படியாக இலங்கையிலிருந்து வெளியேறிய அகதிகள் ஆஸ்திரேலியாவில தஞ்சம் கோரியிருந்தனர். இந்த அகதிகளில் 98 சதவீதமானோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  படகு வழியாக செல்ல ஒரு லட்சம் முதல் பத்து லட்சம் ரூபாய் வரை பெறப்பட்டதாக  தகவல்கள் கூறுகின்றன. ஆட்கடத்தல் நடவடிக்கையாக பார்க்கப்பட்ட இச்சம்பவங்களில், அன்று இலங்கையில் ஆட்சியிலிருந்த ராஜபக்சே அரசாங்கத்தின் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. 

கடந்த 2013 ஆண்டு முதல் கடுமையான எல்லையோர பாதுகாப்புக கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசாங்கம், கடல் வழியாக வரும் அகதிகளை ஒருபோதும் நாட்டினுள் குடியமர்த்த மாட்டோம் என்கின்றது. அந்த வகையில் சுமார் 2000 வெளிநாட்டு அகதிகள் மனுஸ் மற்றும் நவுரு தீவு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு விதமான எல்லையோர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் ஒரு பாதுகாப்பான நாட்டை அடைய வேண்டும் என்ற முயற்சிகளை இலங்கையில் உள்ள தமிழர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். 


Ninaivil

திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம்
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம்
யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு
யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு பரமலிங்கம் சுப்பிரமணியம்
திரு பரமலிங்கம் சுப்பிரமணியம்
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018