நெல்லையில் வைகோ பேட்டி தமிழக அரசு மீது ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் கடும் கோபம்

தமிழ அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஆர்கேநகர் தேர்தலில் திமுக வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார் என்று நெல்லையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

அம்பேத்கர் நினைவு நாளையொட்டி சந்திப்பு பஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாலையணிவித்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மீத்தேன், காவிரி, முல்லைப் பெரியாறு, நீட் தேர்வு ஆகிய விவகாரங்களில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது. இந்த பிரச்னைகளில் மத்திய அரசை எதிர்க்கும் துணிச்சல் தமிழக அரசுக்கு இல்லை. ஜெயலலிதா இருக்கும் போது கூட துணிச்சலாக எதிர்த்தார்.

கன்னியாகுமரியில் ஓகி புயலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 2100 மீனவர்கள் மாயமாகி விட்டனர்.  இறந்த மீனவர் குடும்பத்திற்கு ₹15 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். 

மீனவர்கள் பாதுகாப்புக்கு அங்கு கடற்படை தளம் அமைக்க வேண்டும். குமரியை தேசிய பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஏற்கனவே வாக்காளர்களுக்கு ₹89 கோடி கொடுத்ததாக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது.

ஆனால் இதுகுறித்து தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீண்டும் பணத்தை நூதன முறையில் கொட்டுவதற்கான முயற்சிகள் நடக்கிறது. ஆனால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எனவே ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷ் அமோக வெற்றி பெறுவார். அவரது வெற்றிக்கு மதிமுக முழு மூச்சாக பாடுபடும். இவ்வாறு வைகோ கூறினார்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018