விஷால் மனு தள்ளுபடி விவகாரம்: ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரியிடம் டெல்லி அதிகாரிகள் ஆலோசனை

ஆர்.கே. நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், நடிகர் விஷால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்த தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுசாமியிடம், இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகள் டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர்.

இதற்காக தலைமைச் செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீடியோ கான்பரன்சிங் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வேலுசாமி நேற்று பிற்பகலில் வந்திருந்தார். மாவட்ட தேர்தல் அதிகாரியான கார்த்திகேயனும் தலைமைச் செயலகத்துக்கு வந்திருந்தார்.

வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்ட விவகாரத்தில், என்னென்ன நடந்தது என்பது பற்றி வேலுசாமியிடம் தேர்தல் கமிஷன் உயர் அதிகாரிகள் கேட்டறிந்தனர். 3 மணி நேரத்துக்கும் மேலாக இந்த ஆலோசனை நீடித்தது. தபால் ஓட்டுகள் பற்றி அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

போலி வாக்காளர்கள் நீக்கம்

இதற்கிடையே சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, நிருபர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆர்.கே. நகர் தொகுதியில் இதுவரை 45 ஆயிரத்து 836 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 ஆயிரத்து 150 போலி வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று தி.மு.க. கோரியுள்ளது. அதன்படி, 2 ஆயிரத்து 603 வாக்காளர்களுக்கு இரட்டை பதிவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அதில் 703 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

மீதமுள்ளவர்களின் விவரங்களை இணையதளத்தில் தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும் அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படுகிறது.

இரட்டை பதிவு உள்ள வாக்காளர்கள் வரும் தேர்தலில் ஏதாவது ஒரு ஓட்டு சாவடியில் வாக்களிக்க முடியும். ஆர்.கே. நகர் தேர்தல் முடிந்த பிறகு இரட்டை பதிவில் ஒரு பதிவு நீக்கப்படும். தேர்தல் கமிஷனின் இந்த தொடர் நடவடிக்கையால் 14 சதவீத ஓட்டுகள் குறைந்துள்ளது.

விஷால் விவகாரம்

நடிகர் விஷாலின் வேட்புமனுவை சட்டத்திற்கு உட்பட்டு நிராகரித்ததாக தேர்தல் கமிஷனுக்கு தேர்தல் அதிகாரி தகவல் அளித்துள்ளார். விஷாலின் மனுவை முதலில் தள்ளுபடி செய்துவிட்டு, பிறகு மனுவை ஏற்றதாக அதிகாரி அறிவித்ததாக கூறுகிறீர்கள்.

வாய்மொழியாக எந்த சூழலில் அப்படி ஒரு பதிலை தேர்தல் அதிகாரி கூறினார் என்பது தெரியாது. ஆனால் எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த உத்தரவுதான் செல்லுபடியாகும். விஷாலின் வேட்பு மனுவில் முன்மொழிந்த 10 பேரில் இரண்டு பேரை ஆளும் கட்சியினர் மிரட்டி இருந்தால், அதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்யலாம்.

விஷால் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து, தேர்தல் பார்வையாளர்களுடன் விவாதித்து, அவர்கள் அளிக்கும் விளக்கங்கள் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும். தேர்தல் அதிகாரியை மாற்றுவது குறித்து தேர்தல் கமிஷன்தான் முடிவு எடுக்கும்.

துணை ராணுவம் வருகை

தேர்தல் பணிக்காக துணை ராணுவ வீரர்கள் 10-ந் தேதியில் இருந்து வரத்தொடங்குவார்கள். செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஷில் அசீஸ் 7-ந் தேதி (இன்று) சென்னைக்கு வருகிறார். அரவக்குறிச்சி இடைத்தேர்தலை ரத்து செய்வதற்கு பரிந்துரை செய்தவர் இவர்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Ninaivil

திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்
கனடா
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
யாழ். புங்குடுதீவு குறிகட்டுவானை
பிரான்ஸ்
இறப்பு : 13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
யாழ். சாவகச்சேரி
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018