பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி ஓகி புயல் பாதிப்புகளை அரசியலாக்குவதா?

ஓகி புயலை அரசியல் ஆக்கி பேசுவது அநாகரிகமானது என பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். 

அம்பேத்கர்  நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று காலை பாஜ சார்பில் நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் அருகில் உள்ள  அம்பேத்கர் சிலைக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஓகி புயலால் பாதிக்கப்பட்ட ஊட்டுவாழ்மடம், கருப்புக்கோட்டை, சுசீந்திரம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: குமரி  மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் வெளி மாநிலங்களில் தங்கி  மீன்பிடித்து வருகின்றனர். இதனால் மாயமான மீனவர்கள் எண்ணிக்கையை  கணக்கிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், கடலில் மாயமான மீனவர்களை  மத்திய அரசு கப்பல்கள் மற்றும் ராணுவ விமானங்கள் மூலம் தீவிரமாக தேடி  வருகிறது. 

குமரி மாவட்ட மக்களுக்கு புயல் அறிவிப்பு எட்டவில்லை. குமரி மாவட்டத்தில் அதிக அளவு அழிவு ஏற்பட்டுள்ளது. புயல் தாக்குதலை தேசிய பேரிடராக அறிவிக்க, மாநில அரசு கொடுக்கும் அறிக்கையை வைத்து, மத்திய குழு ஆய்வு செய்து அதன்பிறகுதான் எந்தவகையான பாதிப்புகள் இருக்கிறது என முடிவு செய்து அறிவிக்கப்படும்.

இது தொடர்பாக நிதி அமைச்சர், உள்துறை அமைச்சரை பார்த்து பேசியுள்ளேன். ஓகி புயலை அரசியல் ஆக்கி பேசுவது அநாகரிகமானது. மத்திய அரசு சார்பில் ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் குமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு சென்றுள்ளார் என்றார்.

Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018