தமிழரசுக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடப் போவதில்லை

இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் தீர்மானித்துள்ளது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் 21 பேர் கொண்ட தலைமைக் குழு வவுனியாவில் கூடி இன்று அதிகாலை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இதனைத் தவிர எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதில்லை எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழரசுக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளது,

இதன் பிரகாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்துவந்த இரண்டாவது கட்சியாக ரெலோவும் தமிழரசுக் கட்சியுடன் கூட்டுசேர முடியாது என தீர்மானித்துள்ளது.

நேற்று அதிகாலை வரை நீடித்த தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழுக் கூட்டம் தொடர்பில் தௌிவுபடுத்துவதற்காக மாகாண சபை உறுப்பினர் விந்தன் கணகரட்னம் யாழ்ப்பாணத்தில்  ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.

இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் கூட்டணியாக போட்டியிடுவது தொடர்பிலான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக எமது  செய்தியாளர் கூறினார்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், முன்னணியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி உள்ளிட்டவர்கள் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.

பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு இந்த கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Ninaivil

திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018