பாராளுமன்ற தேர்தலுடன் அயோத்தி வழக்கை இணைத்து பேசுவதா? காங்கிரசுக்கு, பிரதமர் மோடி கண்டனம்

குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தன்டுகா நகர் உள்பட நேற்று பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர், பாராளுமன்ற தேர்தலுடன் அயோத்தி வழக்கை தொடர்பு படுத்தி காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கபில்சிபல் எம்.பி. சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதுபற்றி மோடி பேசும்போது, “சுப்ரீம் கோர்ட்டில் கபில்சிபல் தனது கட்சிக்காரருக்காக வாதிடுவதற்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது.

ஆனால் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகே ராமர் கோவில் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்... எதற்காக அயோத்தி பிரச்சினையுடன், பாராளுமன்ற தேர்தலை இணைத்து பேசவேண்டும்? இது முறையான செயல்தானா?... காங்கிரசார் கொஞ்சமாவது நாட்டைப் பற்றியும் சிந்திக்கவேண்டும்” என்று ஆவேசமாக கூறினார்.

“அதேபோல் உத்தரபிரேதேச தேர்தலுக்காக (உள்ளாட்சி தேர்தல்) முத்தலாக் விவகாரத்தில் நான் மவுனமாக இருந்ததாக கூறுகிறார்கள். எல்லாவற்றையும் தேர்தலுடன் தொடர்பு படுத்தி பார்க்கக்கூடாது. இது பெண்களின் உரிமைகள் தொடர்பானது. எனவே முதலில் மனிதநேயத்துக்குத்தான் முன்னுரிமை கொடுப்பேன். தேர்தல் எல்லாம் அதன்பிறகுதான்” என்று குறிப்பிட்டார். 

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018