அனர்த்தத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் அதிகாரிகளும் முப்படையினரும் தயார் நிலையில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படக் கூடிய அனர்த்தத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில், அனைத்து அதிகாரிகளும் முப்படையினரும் தயார் நிலையில் உள்ளதாக மட்டக்களப்பு மவாட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கச்சேரியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 24 மணிநேரமும் அனர்த்த முகாமைத்துவ செயலணி செயற்படவுள்ளது. மக்கள் இதுதொடர்பில் அநாவசியமான தகவல்களை நம்பி அச்சங்கொள்ளத் தேவையில்லை.


வெள்ளநீர் வடிந்தோடும் முகமாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பிரதேச சபைகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. எமக்குக் கிடைத்துள்ள அறிவித்தலின்படி பொலிஸ், இராணுவம், கடற்படை பிரதேச செயலாளர்கள், முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.


இலங்கையை சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் முக்கியமாக வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம்; 80 தொடக்கம் 100 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது. எனவே மீனவர் சமூகம் மற்றும் கடல்சார் தொழிலாளர்களின் கடல் நடவடிக்கை பாதுகாப்பற்றது என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.


இதுவரையில் சுனாமி அனர்த்தமோ, சூறாவளி அனத்தமோ ஏற்படுவது தொடர்பான அறிவித்தல்கள் கிடைக்கப்பெறவில்லை. கரையோங்களில் வசிப்பவர்களை அறிவூட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் பிரதேச செயலாளர்கள் ஊடாக கிராம உத்தியோகத்தர்களுக்கும் அறிவிக்கப்பட்டள்ளது.

Ninaivil

திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018