இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவரை மீட்க நடவடிக்கை: தமிழக முதலமைச்சர்

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை எண்ணூரில் எண்ணெய் படலத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி ஆர்.கே. நகரில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வாழ்வாதாரத்தை இழந்த மீனவ குடும்பங்களுக்கு அரசின் நிவாரண நிதியை வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், அதிமுக ஆட்சியில் மீனவ மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

மீனவ குடும்பங்களுக்கு புதிதாக 5 ஆயிரம் வீடுகள் கட்ட அதிமுக அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், மீனவர் நலனுக்காக தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களையும் அதிமுக அரசு செய்து வருவதாகக் கூறினார்.

மீனவர்களுக்கு தொழில் நுட்ப உதவிகளை வழங்குவதில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்வதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். இலங்கை சிறையில் வாடும் மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

Ninaivil

திருமதி யோகராணி சாமித்துரை (சாந்தா)
திருமதி யோகராணி சாமித்துரை (சாந்தா)
மன்னார் பெரியமடு
லண்டன்
17 DEC 2018
Pub.Date: December 19, 2018
திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018