கோட்டாபய மீதான விசாரணைக்கு எதிரான இடைக்காலத் தடை நீடிப்பு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க கூடாது என நிதிக் குற்ற விசாரணைப் பிரிவிற்கு விதித்த தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் மேலும் நீடித்துள்ளது.


இதன்மூலம் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவிற்கு ஏற்பட்டுள்ளது.


தனது தந்தையான டீ.ஏ ராஜபக்சவின் பெயரில் அருங்காட்சியகம் அமைப்பதற்காக அரச நிதியிலிருந்து பெறப்பட்ட 90 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான வழக்கு கடந்த 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தன்னை கைது செய்வதற்கு பொலிஸ் நிதிமோசடிப் பிரிவு முயற்சிப்பதாகவும், அதற்கெதிராக இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பிக்குமாறும் கோரி கோத்தபாய ராஜபக்சவின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி, ரிட் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனு மீதான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.


இதன்பிரகாரம் இன்று வரை முன்னாள் பாதுகாப்புச் செயலாளரை கைது செய்வதற்கோ அல்லது அவர் மீதான விசாரணைகளை பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவு முன்னெடுப்பதற்கோ இயலாதபடி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்திருந்தது.


இந்த நிலையில் மீண்டும் இன்றைய தினம் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவிற்கு எதிராக கோத்தபாய ராஜபக்ச தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இடம்பெற்றது.


விடயங்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி, கோட்டாபயவிற்கு எதிராக நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் நடவடிக்கை எடுக்க முடியாதவாறு தடையுத்தரவை பிறப்பித்தார்.


கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்படவுள்ளதாக தென்னிலங்கை முழுவதிலும் பரபரப்பான நிலை ஏற்பட்டிருந்த நிலையில், மீண்டும் அந்த நிலைமையை எதிர்நோக்குவதில் இருந்து கோட்டாபய ராஜபக்ச தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
யாழ்ப்பாணம்
கனடா
7 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 9, 2018