படிம எரிபொருளே காலநிலை மாற்றத்தின் காரணம்

தற்போதைய சீரற்ற காலநிலை மற்றும் காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணம் படிம எரிபொருளே (fossil fuel) என்று மாநாக மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேவிபாலிகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,


மானிட சமூகம் இன்று பாரிய நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றது. சுற்றாடல் மாசடைதல் இதில் முக்கிய விடயமாகும். நமது நாட்டில் ஒருபகுதியில் பலவருடகாலமாக வறட்சி நிலவிவருகின்றது. மற்றொரு பிரதேசத்தில் வெள்ளம் , கடலில் சூறாவளிக்காற்று ஆகியவற்றை எதிர்கொள்கின்றோம். இதனால் நாம் நாளாந்தம் பெரும் அனர்த்தங்களை எதிர்கொள்கின்றோம்.


இதேபோன்று கடல்நீர்மட்டமும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. சில நாடுகள் கடல்நீரிலில் மூழ்கின்றன. சில உயிரினங்கள் அழிகின்றன. வேறு சில உயிரினங்கள் வெகுவிரைவாக உருவாகின்றன.


இவற்றிற்கு முக்கிய காரணம் உலகின் வெப்பநிலை அதிகரிப்பதே ஆகும். இந்த வெப்பநிலை அதிகரிப்பதற்கு காரணம் உலகமக்களின் செயற்பாடுகளே ஆகும். இதனை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். சில நாடுகள் இதனை ஏற்றுக்கொள்ள தயங்குகின்றன என்று குறிப்பிட்டார்.

 

பயணங்களுக்கான போக்குவரத்து விண்ணில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் , சூரிய தாக்கத்தினால் ஏற்படக்கூடிய தழும்புகள் ஆகியன தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இருப்பினும் சுற்றாடலில் காலநிலை மாற்றத்திற்கு காரணம் படிம எரிபொருளே ஆகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Ninaivil

திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017
திரு அருணாசலம் வேல்முருகு
திரு அருணாசலம் வேல்முருகு
அனுராதபுரம்
யாழ். உரும்பிராய் கோப்பாய், கனடா
8 டிசெம்பர் 2017
Pub.Date: December 8, 2017