சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி மகிந்தவிடம் செல்லுமா?

தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்க முன்வரும் பட்சத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கேள்விக்குறியாகி விடும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி பிரதீபா மஹனாமஹேவா தெரிவித்துள்ளார்.


இதன்படி மக்கள் விடுதலை முன்னணி மகிந்த அணி ஆகியவற்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி செல்வதற்கான வாய்ப்பு காணப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.


சர்வதேச ஊடகமான பிபிசியிடம் அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.


தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயற்பட்டு வருகிறது.


நாடாளுமன்றத்தில் 16 ஆசனங்களை கொண்டுள்ள இந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டு வருகின்றார்.


இந்த நிலையில் கூட்டமைப்பிலிருந்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் ரெலோ ஆகியன வெளியேறியுள்ள நிலையில் இலங்கைத் தமிழரசு கட்சி மற்றும் புளோட் அமைப்பு ஆகியனவே கூட்டமைப்பில் தற்போது அங்கம் வகிக்கின்றன.


மேலும் இலங்கை தமிழரசுக் கட்சியிலுள்ள சிலர் கட்சித் தாவும் பட்சத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கேள்விக் குறியாகிவிடும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.


அவ்வாறு இல்லையெனில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பட்சத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி செல்வதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Ninaivil

திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம்
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம்
யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு
யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு பரமலிங்கம் சுப்பிரமணியம்
திரு பரமலிங்கம் சுப்பிரமணியம்
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018