வெலிக்கடை படுகொலை - 13 இல் விசாரணை அறிக்கைகள்

கொழும்பு - வெலிக்கடை சிறைச்சாலையில் 2012ஆம் ஆண்டு 27 கைதிகள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில்  தாக்கல்  செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை அறிக்கைகள் எதிர்வரும் 13ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளன.


வெலிக்கடை படுகொலை - 13  இல் விசாரணை அறிக்கைகள்


இந்த விசாரணை அறிக்கைகள் சட்ட மா அதிபர் திணைக்களத்தால்  சமர்ப்பிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று அறிவிக்கப்பட்டது.


மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் எல்.ரி.பி.தெஹிதெனிய மற்றும் நீதியரசர் ஷிரான் குணரத்ன ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில்  நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.


மனுதாரர் சார்பில் முன்னிலையாகிருந்த சிரேஷ்ட சட்டத்தரணி ரத்னவேல் மேற்படி விசாரணை அறிக்கை நேற்று சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததை சுட்டிக் காட்டினார்.


எனினும் விசாரணை அறிக்கை இன்னும் தயாராகவில்லை என சிரேஷ்ட அரச சட்டவாதி மாதவ தென்னகோன் தெரிவித்துள்ளார்.


இதையடுத்து விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க குறுகிய கால அவகாசம் ஒன்றினை வழங்குமாறு சட்டத்தரணி ரத்னவேல் கோரியுள்ளார்


இதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழக்கை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.


2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெலிக்கடை சிறைச்சாலையில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையில் 27 கைதிகள் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன், சுமார் 40 பேர் வரை காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
யாழ்ப்பாணம்
கனடா
7 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 9, 2018