கல்லடி கடலில் பிடிபட்ட மீன்கள், சுனாமி அனர்த்த எச்சரிக்கை அல்ல. பேராசிரியர்

மட்டக்களப்பு கல்லடி கடலில் பிடிபட்ட மீன்கள், சுனாமி அல்லது வேறு இயற்கை அனர்த்தங்களை ஏற்படுத்துவதற்கான எச்சாரிக்கை அல்ல என்று சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது ஆணையாளர் பேராசிரியர் டர்னி பிரதீப்குமார தெரிவித்துள்ளார்.


கல்லடி கடலில் மீனவர்களின் வலைகளில் சிக்குண்ட பாம்புகள், கடற்பாம்புகள் அல்ல. அவை விலாங்கு மீனினத்தைச் சேர்ந்த ஆங்குலா என்ற மீன்கள் எனவும் பேராசிரியர் ஊடகங்களுக்கு கூறியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.


மீனவர்களின் வலைகளுக்குள் சிக்குண்ட அந்த மீன்களினால் பிரதேச மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டிருந்தது. 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி சுனாமி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், மீன் வடிவிலான பாம்புகள் மீனவர்களின் வலைகளுக்குள் சிக்குண்டன. சில மீன்கள் தாங்களாகவே கரையொதுங்கியும் இருந்தன.


பிரதேச மக்களின் இந்த அனுபவத்தினால், சில தினங்களுக்கு முன்னர் மீனவர்களின் வலைகளுக்குள் சிக்கிய கடற் பாம்புகள் என சந்தேகிக்கப்பட்ட, அந்த மீன்களை அதிகாரிகள் பரிசோதனைக்காக சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கு அனுப்பியிருந்தனர். அதனை பரிசோதனை செய்த பேராசிரியர் டர்னி பிரதீப்குமார, மக்கள் அச்சமடைய தேவை இல்லையென கூறியுள்ளார்.


ஆறுகள், ஏறிகள் மற்றும் களப்புகளில் வாழும் இந்த மீனினங்கள், இனப்பெருக்கத்துக்காக, களப்புகளினூடாக கடலுக்குள் பிரவேசிப்பதாகவும் அந்த மீன்களே மீனவர்களின் வலைகளுக்குள் சிக்குண்டது எனவும் பேராசிரியர் கூறினார். இனப்பெருக்கம் முடிவடைந்ததும் மீண்டும் அந்த மீன்கள் ஆறுகள், ஏரிகளுக்கு திரும்புவது வழமை என்றும் பேராசிரியர் கூறியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

Ninaivil

திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
யாழ்ப்பாணம்
கனடா
7 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 9, 2018