மயிலிட்டித் துறையை விரைந்து சீரமைக்க அமைச்சரவை ஒப்புதல்!

அரச படைகளால் அண்மையில் விடுவிக்கப்பட்ட  மயிலிட்டி துறைமுகத்தை விரைவாகச் சீரமைத்து கடற்றொழிலாளர்களின் பாவனைக்கு வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.


யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கிலுள்ள மயிலிட்டி மீன்பிடித்துறை முகம் 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டின் கடல் தொழில் துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும்.


அது மாத்திரமன்றி தென்கிழக்கு பருவ பெயர்ச்சி காலப்பகுதியிலும் பயன்படுத்தகூடியது இதன் சிறப்பாகும்.

இந்நிலையில் மோதல்கள் நிலவிய காலப்பகுதியில் இதன் செயற்பாடுகள் முடங்கியிருந்தன.


வடக்கு அமைதி நிலை மீண்டும் திரும்பியதையடுத்து கடந்த ஜுலை மாதத்தில் இந்த துறைமுகமும் மற்றும் அதனை அண்டிய பகுதியில் 54 ஏக்கர் காணியையும் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக அரச படைகள் விடுவித்தன.


இதற்கமைவாக அந்த பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்ந்தனர்.இதனால் மயிலிட்டித் துறைமுகத்தை மீள பயன்படுத்துவதற்கு ஏதுவான வகையில் சீரமைப்புச் செய்வதற்கான வேலைத்திட்டங்களை துரித கதியில் ஆரம்பிப்பதற்கு அவசியமான செயற்றிட்டங்களை மேற்கொள்ளவேண்டும் என தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்குப் பத்திரம் முன்வைத்தார். இந்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

Ninaivil

திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
யாழ். மிருசுவில்
லண்டன்
17 பெப்ரவரி 2018
Pub.Date: February 18, 2018
திருமதி சரஸ்வதி கந்தசாமி
திருமதி சரஸ்வதி கந்தசாமி
யாழ். காங்கேசன்துறை
பிரித்தானியா
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 16, 2018
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
யாழ். பலாலி
ஜெர்மனி
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 14, 2018
திரு செல்வதுரை கனகநாயகம்
திரு செல்வதுரை கனகநாயகம்
யாழ். ஆனைக்கோட்டை
பிரான்ஸ்
9 பெப்ரவரி 2018
Pub.Date: February 13, 2018
திருமதி வல்லிபுரம் செல்வராசாத்தி
திருமதி வல்லிபுரம் செல்வராசாத்தி
யாழ். நவாலி
கனடா
11 பெப்ரவரி 2018
Pub.Date: February 12, 2018

Event Calendar