நேபாள பாராளுமன்ற தேர்தலுக்கான இறுதி கட்ட தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

நேபாள நாடாளுமன்றம் மற்றும் 7 மாகாணப் பேரவைகளுக்கான பொதுத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 65 சதவீத வாக்குகள் பதிவாயின. அந்நாட்டில், புதிய அரசியல் சாசனத்தின் கீழ் நடைபெறும் முதல் பொதுத் தேர்தல் இதுவாகும். 


அதை தொடர்ந்து தற்போது, நேபாளத்தில் பாராளுமன்ற, மாகாண சபைத் தேர்தல்களுக்கான  இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. நேபாளத்தில் மொத்தம்  5 மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த மாவட்டங்களில் 12, 235,993 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள்,மத்திய பாராளுமன்றத்திற்கான 128 பிரதிநிதிகளையும் மாகாண சபைகளுக்கான 256 பிரதிநிதிகளையும் தேர்ந்தெடுப்பார்கள். மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். 


தேர்தலுக்கு முந்தைய வன்முறை அதிகரிப்பதை தடுக்க, 45 மாவட்டங்களில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 65 போலீசார் பணியாற்றி வருகின்றனர்.  இது தவிர, இராணுவமும் நிறுத்தப்பட்டுள்ளது.வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன், வாக்குப்பதிவு  எண்ணிக்கை தொடங்குவதற்கான நடைமுறைகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாள தேர்தல் முடிவுகளை இந்தியா, சீனா ஆகிய நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.


நேபாளத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு புதிய அரசியல் சாசனம் கொண்டு வரப்பட்டது. இந்த அரசியல் சாசனத்தில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் இல்லையெனில், இந்திய வம்சாவளிகளான மாதேசி இனத்தவர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய சாசனம் அமல்படுத்தட்ட பிறகு, அங்கு தற்போது நடைபெறும் தேர்தல் மிகப்பெரிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. 

Ninaivil

திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
யாழ். மிருசுவில்
லண்டன்
17 பெப்ரவரி 2018
Pub.Date: February 18, 2018
திருமதி சரஸ்வதி கந்தசாமி
திருமதி சரஸ்வதி கந்தசாமி
யாழ். காங்கேசன்துறை
பிரித்தானியா
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 16, 2018
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
யாழ். பலாலி
ஜெர்மனி
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 14, 2018
திரு செல்வதுரை கனகநாயகம்
திரு செல்வதுரை கனகநாயகம்
யாழ். ஆனைக்கோட்டை
பிரான்ஸ்
9 பெப்ரவரி 2018
Pub.Date: February 13, 2018
திருமதி வல்லிபுரம் செல்வராசாத்தி
திருமதி வல்லிபுரம் செல்வராசாத்தி
யாழ். நவாலி
கனடா
11 பெப்ரவரி 2018
Pub.Date: February 12, 2018

Event Calendar