வடக்கு கிழக்கில் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு இன்னும் அனுமதி இல்லை

வடக்கு கிழக்கில் எதிர்நோக்கப்பட்ட சீரற்ற காலநிலை தொடர்பில் இதுவரையில் எந்த விதமாக குறிப்பிடத்தக்க சம்பவங்களும் இடம் பெற்றதான தகவல் இல்லை என்று குறித்த பிரதேசங்களை சேர்ந்த இடர் முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பில் இன்று பகல் எமது செய்திப்பிரிவிற்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,


வடக்கு கிழக்கில் மீன்பிடி நடவடிக்கை இன்னும் வழமை நிலைக்கு திரும்பவில்லை. இந்த பிரதேசத்தில் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கையில் மீனவர்கள் ஈடுபடுவதற்கு இன்னும் அனுமதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


கரையோரங்களில் மாத்திரம் சிலர் மீன்பிடி நடவடிக்கiயில் இடம்பெறுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.


காலநிலை தொடர்பான புதிய அறிக்கை இன்று மாலை கிடைக்கும் என தெரிவித்த அதிகாரிகள் நாளை மீனவர்களை ஆழ்கடல் மீன்பிடிக்கு அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.


வடக்கு கிழக்கில் கடந்த 3 தினங்களாக எந்தவித குறிப்பிடத்தக்க மாற்றமும் ஏற்படவில்லை. சீரற்ற காலநிலையின் காரணமாக கடந்த 3 தினங்களாக கடல் நடவடிக்கையில் ஈடுப்படாத மீனவர்கள் வாழ்வாதார  பிரச்சனையை எதிர்கொண்டுள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.


சில இடங்களில் கடலில் கொந்தளிப்பான நிலமை காணப்படுகின்றது . இதே வேளை வடக்கு கிழக்கில் எத்தகைய அனர்த்த நிலையையும் எதிர்கொள்ள முப்படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

Ninaivil

திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
யாழ். தென்புலோலி
கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: February 21, 2018
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
யாழ். அரியாலை
பிரான்ஸ்
19 பெப்ரவரி 2018
Pub.Date: February 19, 2018
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
யாழ். மிருசுவில்
லண்டன்
17 பெப்ரவரி 2018
Pub.Date: February 18, 2018
திருமதி சரஸ்வதி கந்தசாமி
திருமதி சரஸ்வதி கந்தசாமி
யாழ். காங்கேசன்துறை
பிரித்தானியா
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 16, 2018
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
யாழ். பலாலி
ஜெர்மனி
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 14, 2018