11 தமிழர்கள் கடத்தல்;சந்தேக நபர்களின் பிணை மீது ஜனவரியில் முடிவு

தமிழ் இளைஞர்கள் வெள்ளை வானில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் ஸ்ரீலங்கா கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி தஸநாயக்க உள்ளிட்ட கடற்படையின் புலனாய்வுத்துறை உறுப்பினர்கள் 6 பேருக்குமான பிணை கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.


இந்த வழக்கில் சந்தேக நபர்களின் பிணை கோரிக்கையை எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதியன்று பரிசீலிக்கப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.


2012ஆம் ஆண்டு கொழும்பு கொட்டாஞ்சேனை மற்றும் தெஹிவளை பகுதிகளில் 5 இளைஞர்கள் உட்பட 11 தமிழர்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.


குறித்த சந்தேக நபர்கள் எதிர்வரும் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டுமென்று ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றபடி விளக்கமறியலில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில் சந்தேக நபர்கள் பிணை வழங்கும்படி கோரி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.


இந்த பிணை மனுக் கோரிக்கை மீதான விசாரணை கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆர் ஹெய்யன்துடுவ முன்னிலையில் இடம்பெற்றது.


இதன்போதே பிணை மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜனவரி மாதம் வரை ஒத்திவைப்பதாக அறிவித்த நீதவான், அதுவரை பிணை வழங்கமுடியாது என்பதையும் அறிவித்தார்.

Ninaivil

திருமதி மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி
திருமதி மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி
யாழ். சாவகச்சேரி
நோர்வே
25 மே 2018
Pub.Date: May 26, 2018
திருமதி நகுலேஸ்வரி பரமசிவம் (இளைப்பாறிய தபால் அதிபர்- உடையார்கட்டு)
திருமதி நகுலேஸ்வரி பரமசிவம் (இளைப்பாறிய தபால் அதிபர்- உடையார்கட்டு)
யாழ். மல்லாகம்.
முல்லைத்தீவு உடையார்கட்டு, கனடா
24 மே 2018
Pub.Date: May 25, 2018
திரு முருகேசு சின்னத்துரை
திரு முருகேசு சின்னத்துரை
யாழ். கோண்டாவில்
கொழும்பு வெள்ளவத்தை
20 மே 2018
Pub.Date: May 24, 2018
திருமதி திவ்யா சுதாகரன் (Bcom, CIMA, CPA, Tax Consultant at H&R Block , Ex. Asst. Manager– Bank of Ceylon)
திருமதி திவ்யா சுதாகரன் (Bcom, CIMA, CPA, Tax Consultant at H&R Block , Ex. Asst. Manager– Bank of Ceylon)
யாழ். கோப்பாய்
கொழும்பு, அவுஸ்திரேலியா
18 மே 2018
Pub.Date: May 21, 2018
திருமதி ராஜராயன் லிங்கமணி
திருமதி ராஜராயன் லிங்கமணி
கொழும்பு
லண்டன்
15 மே 2018
Pub.Date: May 17, 2018