மோதல்கள் ஏற்படுவதை தடுக்க சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டம்

மோதல் ஏற்படுவதை தடுப்பதற்கு சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திடம் முன்னெடுக்கப்படுவதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

பல்வேறு இனத்தவர் மற்றும் மதத்தவர் புரிந்துணர்வுடன் வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.


பாராளுமன்றத்தில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சிற்கான வரவு செலவு திட்ட நிதி ஓதுக்கீட்டு விவாதத்தில் அமைச்சர் இவ்வாறு உரையாற்றினார. அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,


சமாதானத்தை விரிவுப்படுத்த மதம் , கலாச்சாரம் , தேசிய பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்து அனைத்து பாடசாலைகளிலும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் சமாதானத்தை விரிபடுத்துவதற்கான செயற்பாடுகள் தெளிவுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.


பன்முகத்தன்மையை மதித்தல் பல மதங்கள் மற்றும் கலாச்சார செயற்பாடுகள் ஊடாக மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.மாணவர்களின் ஆற்றல் அறிவை மேம்படுத்துவதற்கான நடைமுறை வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்பட்டுள்ளன.


தேசிய ஒன்றிணைப்பை முன்னிலைப்படுத்திய வேலைத்திட்டங்கள் பல்கலைகழக மட்டத்திலும் நடத்தப்பட்டன. சமாதான மற்றும் மறுசீரமைப்பை ஏற்படுத்த இவர்களின் ஆற்றலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.


விளையாட்டு கேலிச் சித்திரம் பயன்படுத்தி தெளிவுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.மோதல்கள் ஏற்படுவதை தடுப்பதற்காக சிந்தனை மேம்பாட்டு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


பல்வேறு இன மக்கள் மற்றும் பல்வேறு மத மக்கள் புரிந்துணர்வுடன் வாழக்கூடிய சூழ்நிலையில் பல நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Ninaivil

திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
யாழ். தென்புலோலி
கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: February 21, 2018
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
யாழ். அரியாலை
பிரான்ஸ்
19 பெப்ரவரி 2018
Pub.Date: February 19, 2018
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
யாழ். மிருசுவில்
லண்டன்
17 பெப்ரவரி 2018
Pub.Date: February 18, 2018
திருமதி சரஸ்வதி கந்தசாமி
திருமதி சரஸ்வதி கந்தசாமி
யாழ். காங்கேசன்துறை
பிரித்தானியா
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 16, 2018
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
யாழ். பலாலி
ஜெர்மனி
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 14, 2018