பரோல் வழங்கினால் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்வேனா?- உயர் நீதிமன்றத்தில் நளினி மறுப்பு

பரோல் வழங்கினால் வெளிநாடு தப்பிச் சென்று விடுவார் என தமிழக அரசின் குற்றச்சாட்டை மறுத்து நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமனு தாக்கல் செய்துள்ளார்.

1991-ம் ஆண்டு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக 26 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார் நளினி, இவரது மகள் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆறு மாதங்கள் பரோல் வழங்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்து தமிழக அரசு சார்பில் கடந்த நவம்பர் 16ம் தேதி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் நளினியை பரோலில் அனுப்பினால் வெளிநாடு தப்பிச் சென்று விடுவார் என்று கூறி, பரோல் வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த பதில் மனுவுக்கு பதிலளிக்கும் வகையில் நளினி தரப்பில் ‘ரிஜாயிண்டர்’ எனப்படும் விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தன்னை முன் கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்ததைச் சுட்டிக் காட்டியுள்ள நளினி, 20 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்துள்ளதால், முன் கூட்டியே விடுதலை பெற தனக்கு தகுதி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தான் விடுதலை பெற முடியவில்லை எனவும், தன்னை விடுதலை செய்ய முடிவெடுத்த தமிழக அரசு, தற்போது பரோல் வழங்க மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் மனுவில் கூறியுள்ளார்.

பரோல் வழங்கினால் வெளிநாடு தப்பிச் சென்று விடுவேன் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தவறு என்றும், இதே வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளனுக்கு தமிழக அரசு 2 மாத பரோல் வழங்கியதைப் போல, மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக ஆறு மாத பரோல் எனக்கு வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Ninaivil

திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம்
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம்
யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு
யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு பரமலிங்கம் சுப்பிரமணியம்
திரு பரமலிங்கம் சுப்பிரமணியம்
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018