‘ஒகி’ புயலுக்கு கேரளாவில் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு

தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் கடந்த 30-ந் தேதி தாக்கிய ‘ஒகி’ புயலால் பெருத்த சேதம் விளைந்தது. இந்த புயலில் சிக்கி கணிசமான உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன.

குறிப்பாக இந்த பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் மாயமாகி உள்ளனர். இதில் பலர் உயிருடன் மீட்கப்பட்டு வரும் நிலையில், சில மீனவர்களின் பிணங்களும் மீட்கப்பட்டு வருகின்றன.

கேரளாவில் ‘ஒகி’ புயலில் சிக்கி மீனவர்கள் உள்பட 33 பேர் நேற்று முன்தினம் வரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அங்குள்ள ஆலப்புழா மற்றும் கொச்சி இடையேயான கடற்பகுதியில் இருந்து நேற்று காலையில் மேலும் 3 மீனவர்களின் பிணம் மீட்கப்பட்டது. இத்துடன் கேரளாவில் புயலுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.

கோழிக்கோடு-கொச்சி இடையே படகுடன் தத்தளித்துக்கொண்டு இருந்த 15 மீனவர்களை விமானப்படை விமானம் ஒன்று நேற்று கண்டுபிடித்தது. இதைத்தொடர்ந்து அவர்களை மீட்பதற்காக டோர்னியர் விமானம் மற்றும் கப்பலை கடற்படை அனுப்பி வைத்துள்ளது.

இதற்கிடையே புயல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கோழிக்கோடு-லட்சத்தீவு இடையிலான கப்பல் போக்குவரத்து நேற்று மீண்டும் தொடங்கியது. 

Ninaivil

திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம்
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம்
யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு
யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு பரமலிங்கம் சுப்பிரமணியம்
திரு பரமலிங்கம் சுப்பிரமணியம்
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018