இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி முதலில் பேட்டிங்

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இது இந்திய அணிக்கு வாழ்வா-சாவா போட்டியாகும். இதிலும் மண்ணை கவ்வினால், சொந்த மண்ணில் இலங்கையுடன் தொடரை இழந்ததில்லை என்ற நீண்ட கால பெருமையை பறிகொடுக்க வேண்டி இருக்கும். இதனால், இந்த ஆட்டம் இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இப்போட்டியில், டாஸ் வென்ற  இலங்கை அணி கேப்டன் திசர பெராரே, இந்திய அணியை முதலில் பேட் செய்யுமாறு பணித்தார். இதன்படி முதலில் இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது. 


இரு அணிகளிலும் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-

இந்தியா, 


ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், எஸ்.ஐயர், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, எம்.எஸ் தோனி, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்குமார், வாஷிங்டன் சுந்தர். பும்ரா, சாகல், 


இலங்கை, 


குணதிலகா, உபுல் தரங்கா, லஹிரு திரிமண்ணே, ஆஞ்சலோ மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்லா, அசலே குனரத்னே, திசர பெரேரா, சச்சித் பதிரன, சுரங்கா லக்மல், அகில தனஞ்செயா, நுவன் பிரதீப்.

Ninaivil

திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018