ஒருநாள் கிரிக்கெட்போட்டியில் ரோஹித் ஷர்மா இரட்டைச்சதம் 392 ஓட்டங்கள் குவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1ற்கு0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றுவருகிறது.இது இந்திய அணிக்கு முக்கியமான போட்டியாகும்.இதிலும் தோல்வி அடைந்தால்,சொந்த மண்ணில் இலங்கையுடன் தொடரை இழந்ததில்லை என்ற நீண்ட கால பெருமையை பறிகொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.


இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி  முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது.தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும்,ஷிகர் தவானும் களமிறங்கியுள்ளனர்.அரைசதம் அடித்த தவான் 68 ஓட்டங்களில் சசித் பதிரானா பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு முனையில் நிலைத்துநின்று விளையாடிய  ரோஹித் ஷர்மா இரட்டை சதம் அடித்துள்ளார். 


இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 392 ஓட்டங்கள் எடுத்துள்ளது.ரோஹித் 208 ஓட்டங்கள்,ஷ்ரேயாஸ் 88 ஓட்டங்கள்,தவான் 68 ஓட்டங்கள்,டோனி 7 ஓட்டங்கள்,பாண்டியா 8 ஓட்டங்கள் பெற்றுள்ளனர்.இலங்கை அணிக்கு வெற்றிபெற வேண்டுமானால் 393 ஓட்டங்கள் பெறவேண்டியுள்ளது.

Ninaivil

அமரர் ரவீந்திரதாஸ்
அமரர் ரவீந்திரதாஸ்
யாழ் மாதகலை
கனடா
21.4.2018
Pub.Date: April 25, 2018
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
யாழ். கொட்டடி
கொழும்பு, யாழ். கொக்குவில்
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 24, 2018
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018