டோனி - ஹர்திக் ஓட்டப்பந்தயம்! (வைரலாகும் வீடியோ)

உலகின் அதிவேகமாக ஓடக்கூடியவர் என்று அனைவராலும் குறிப்பிடப்படுபவர் ஜமைக்காவின் ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட். 2009ல் பெர்லினில் நடந்த ஓட்டப்பந்தயத்துக்கான உலக சாம்பியன் ஷிப் போட்டியில் இவர் 100 மீட்டர் பிரிவில் முதல் இடம் பிடித்தார். அவர் 100 மீட்டரை 9.58 நொடிகளில் கடந்தார். இதுதான் இப்போது வரை உலகின் மிகவும் வேகமான ஓட்டமாக இருக்கிறது. 

இதேபோல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியும் அவரது ஓட்டத்திற்கு பெயர் போனவர். அவர் 20 மீட்டர் தூரத்தை கடப்பதற்கு 2.7 நொடிகள் எடுத்துக்கொள்கிறார். ஆனால் முதல் 20 மீட்டர் தூரத்தை கடக்க மட்டுமே அவர் இவ்வளவு நேரம் எடுக்கிறார். மற்ற 80 மீட்டர் தூரத்தை அவர் இதைவிட வேகமாக கடக்கிறார். 

இந்நிலையில், டோனி தனது ஓட்டத்திறமையை மீண்டும் இன்று நிரூபித்து காட்டியுள்ளார். இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி பஞ்சாப் மாநிலத்தின் மொகாலியில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக இரு அணியினரும் பயிற்சி மேற்கொண்டனர். 

இந்த பயிற்சியின் போது இந்திய அணி வீரர்கள் ஓட்டப்பந்தய போட்டி நடத்தினர். இதில் இளம் இந்திய அணி வீரர்களுடன், 36 வயதாகும் டோனியும் கலந்துகொண்டார். போட்டி தொடங்கியதும் வழக்கம் போல டோனி முதல் ஆளாக ஓடினார். மற்ற வீரர்கள் அவரது வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் நின்றுவிட்டனர். 

ஆனால் 24 வயது இளம் வீரரான ஹர்திக் பாண்டியா மட்டும் டோனிக்கு ஈடுகொடுத்து ஓடினார். இந்த ஓட்டப்பந்தயத்தில் டோனி பாண்டியாவை விட வேகமாக ஓடி, மீண்டும் தனது உடற்தகுதியை வெளிப்படுத்தியுள்ளார். 36 வயதுடைய வீரர், 24 வயதுடைய வீரரை காட்டிலும் வேகமாக ஓடி, வயது உடற்தகுதிக்கு ஒருபோதும் தடையாக இருக்காது என்பதை தோனி நிரூபித்து காட்டியுள்ளார். 

இந்த வீடியோ தற்போது இளையதளத்தில் வெளியிடப்பட்டு வைரலாக பரவிவருகிறது. கடந்த மாதமும் 23 வயது வீரரான அக்‌ஷர் பட்டேல் டோனியுடன் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018