’டபுள் செஞ்சுரி டான்’ ரோகித் வந்தாலே எதிரிக்கு தன்னால மெர்சல் தான்: சச்சின்!

டபுள் செஞ்சுரி ரோகித் சர்மா களத்தில் நிற்கும் வரை எதிரணி வீரர்களுக்கு மெர்சல் தான் என ஜாம்பவான் சச்சின் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இலங்கை அணி வென்று 1-0 என முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில் இரு அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி மொஹாலியில் நடந்தது. இதில் இலங்கை அணி, தரம்சாலாவில் இந்திய அணிக்கு கொடுத்த தர்ம அடிக்கு இரட்டை சதம் அடித்து தனி ஒருவனாக கேப்டன் ரோகித் சர்மா பதிலடி கொடுக்க, இலங்கை அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் மண்ணை கவ்வியது.

இதில் சர்வதேச அரங்கில் சாத்தியமில்லை என கருதப்பட்ட இரட்டை சதத்தை மூன்றாவது முறையாக எட்டி சாதனை படைத்த கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஜாம்பவான் சச்சின் டுவிட்டரில் வாழ்த்து தெரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,’ நீ பேட்டிங் செய்யும் போது பார்ப்பதே தனி மகிழ்ச்சி தான். இதேபோல நீண்ட தூரம் செல்ல வாழ்த்துக்கள்.’ என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ள பதிவில்,’ அற்புதம் ரோகித், செம்ம.........பேட்டிங்’ என குறிப்பிட்டுள்ளார்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018