அப்ரிடி ‘ஹாட்ரிக்’ :சேவக் அணி தோல்வி!

துபாயில் நடந்த உள்ளூர் டி10 கிரிக்கெட் போட்டியில், சேவக்கின் அரேபியன்ஸ் அணி அப்ரிடியின் பாக்தூன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரின் வெற்றியை தொடர்ந்து வங்கதேசம், கரீபிய தீவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதே போல உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் துவங்கப்பட்டது.

இந்நிலையில், துபாயில் இதே பாணியில் புதிய முயற்சியாக டி10 தொடர் முதல் முறையாக நடக்கிறது. இதில் இந்திய அதிரடி மன்னன் சேவக் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த அதிரடி வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இதில் மராத்தா அரேபியன்ஸ் அணி கேப்டனாக சேவக் நீண்ட இடைவேளைக்கு பின் மீண்டும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றார். இதில் இரண்டாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அதிரடி நாயகன் அப்ரிடியின் பாக்தூன்ஸ் அணியை சேவக் தலைமையிலாம மராத்தா அரேபியன்ஸ் அணி எதிர்கொண்டது.

இதில் ‘டாஸ்’ வென்ற அரேபியன்ஸ் அணி சேவக் முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பாக்தூன்ஸ் அணிக்கு பகர் ஜமான் (45) டாசன் (44) ஆகியோர் கைகொடுக்க, அந்த அணி 10 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்தது.எட்டக்கூடிய இலக்கை துரத்திய அரேபியன்ஸ் அணிக்கு ஹேல்ஸ் (57 ) மட்டும் அரைசதம் அடித்து கைகொடுக்க, அரேபியன்ஸ் அணி 10 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதில் பாக்தூன்ஸ் அணி கேப்டன் அப்ரிடி ‘ஹாட்ரிக்’ விக்கெட் கைப்பற்றினார்.

கேரளா முதல் வெற்றி:

முன்னதாக நடந்த முதல் லீக் போட்டியில் கேரளா கிங்ஸ் அணி (8 ஓவர், 90/2, ஸ்டெட்லிங் 66*) , பெங்கால் டைகர்ஸ் (10 ஓவர், 86/1) அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. இதில் கேரளா கிங்ஸ் வீரர் ஸ்டெர்லிங் 27 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் உட்பட 66 ரன்கள் விளாசினார்.

கிரேட் காளி வருகை:

இத்தொடரை ஊக்கப்படுத்தும் விதமாக டபிள்யூ.டபிள்யூ.இ., வீரர் கிரேட் காளி, முன்னாள் இந்திய கேப்டன் அசாருதின் ஆகியோர் நேரில் வந்து முதல் லீக் போட்டியை கண்டுகளித்தனர்.

Ninaivil

திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018