இலங்கை கடற்படை மீது மண்டபம் பொலிஸ் நிலையத்தில் வழக்கு பதிவு

இராமேஸ்வரம் தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று இரவு இந்திய-இலங்கை கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் கடுமையாகத் தாக்கினர். தங்கச்சிமடத்தைச் சேர்ந்த டிட்டோ என்பவரது விசைப் படகு மீது துப்பாக்கியால் சுட்டனர்.

அந்த படகில் இருந்த பிரிட்ஜோ (வயது21) என்ற மீனவர் மீது குண்டுகள் பாய்ந்தது. ஒரு குண்டு அவர் கழுத்தை துளைத்தது. படகு உள்ளேயே அவர் உயிரிழந்தார். சரோண் (24) என்பவர் வலது கால்இ இடது கை போன்றவற்றில் குண்டு பாய்ந்து காயம் அடைந்தார். 

இலங்கை கடற்படையின் இந்த அட்டூழியத்தைக் கண்டித்து இராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படை வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மீனவர் பிரிட்ஜோவை சுட்டுக் கொன்றதாக இலங்கை கடற்படை மீது மண்டபம் கடலோர பொலிஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மீனவர் பிரிட்ஜோவுடன் மீன்பிடிக்கச் சென்ற அருள் கிளிண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Ninaivil

திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018