இந்திய கடற்படை பறிமுதல் செய்த இலங்கை மீனவர்களின் 3 படகுகள் விடுவிப்பு

எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இந்திய கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட இலங்கை மீனவர்களின் 3 படகுகள் விடுவிக்கப்பட்டன.

இலங்கை கடற்படையினரால் கடந்த மூன்று ஆண்டுகளில் 1,000-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். 200-க்கும் மேற்பட்ட படகுகள் கைப்பற்றப்பட்டன. இதில் பெரும்பாலான படகுகள் விடுவிக்கப்படவில்லை.

மூன்று மாத சிறைவாசத்துக்குப் பின் அவ்வப்போது தமிழக மீனவர்கள் மட்டுமே விடுவிக்கப்படுகின்றனர்.

இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் 2015-ம் ஆண்டில் 42 படகுகளை விடுவிக்க இலங்கை அரசு கடந்த ஜுன் மாதம் உத்தரவிட்டது.

அதேபோன்று, இந்திய கடற்படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட இலங்கை மீனவர்களின் 10 படகுகளை விடுவிக்க மத்திய அரசு ஒத்துக் கொண்டது. அதன்படி முதல் கட்டமாக கடந்த நவம்பரில் இலங்கை மீனவர்களின் 7 படகுகள் விடுவிக்கப்பட்டன.

இந்நிலையில், இலங்கை மீனவர்களின் 3 படகுகள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. இப்படகுகளை சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படையினரிடம் கடந்த வியாழக்கிழமை மாலை இந்திய கடற்படையினர் ஒப்படைத்தனர்.

Ninaivil

அமரர் ரவீந்திரதாஸ்
அமரர் ரவீந்திரதாஸ்
யாழ் மாதகலை
கனடா
21.4.2018
Pub.Date: April 25, 2018
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
யாழ். கொட்டடி
கொழும்பு, யாழ். கொக்குவில்
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 24, 2018
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018