வங்கதேசிகள சட்டவிரோதமாக கடத்தப்பட்ட விவகாரம்: மலேசிய சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றிய 600 அதிகாரிகள் அதிரடி மாற்றம்

மலேசியாவில் பணியாற்றி வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களில எட்டில் ஒருவர் வங்கதேசியாக இருக்கும் சூழலில், மேலும் பல வங்கதேசிகள் சட்டவிரோதமாக மலேசியாவிற்குள் கடத்தி வரப்படுகின்றனர்.

இந்த விவகாரத்தில், மலேசிய குடிவரவுத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளதாக சந்தேகங்கள் எழுந்திருந்தன. இதையடுத்து மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றிய 600 க்கும் மேற்பட்ட குடிவரவுத்துறை அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். அதாவது இவ்விமான நிலையத்திலிருந்த 40% அதிகாரிகள் இடமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பற்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்குக் கொண்ட மலேசிய துணைப் பிரதமர் ஜாகித் ஹமிதி, “சில ஊழியர்களால் குடிவரவுத்துறையின் மீது படிந்த கறையினைப் போக்க இந்த உடனடியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருக்கிறார். 

வங்கதேசிகளை கடத்த முயன்ற குற்றத்திற்காக கடந்த டிசம்பர் 14(வியாழக்கிழமை) அன்று இரண்டு குடிவரவுத்துறை அதிகாரிகள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  

சட்டவிரோதமாக அழைத்து வரப்படுகிற வங்கதேசிகளில் பெரும்பாலானோர் உடல் உழைப்புச் சார்ந்த தொழில்களில் எந்தவித முறையான ஆவணங்களின்றி ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவ்வாறு 6 முதல் 14 % வங்கதேசிகள் மலேசியாவில் உள்ளதாக கடந்த கால புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

Ninaivil

அமரர் ரவீந்திரதாஸ்
அமரர் ரவீந்திரதாஸ்
யாழ் மாதகலை
கனடா
21.4.2018
Pub.Date: April 25, 2018
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
யாழ். கொட்டடி
கொழும்பு, யாழ். கொக்குவில்
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 24, 2018
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018