தவான் அதிரடி சதம் - இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிந்துள்ள முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது.

இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதற்கான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து, இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தனுஷ்கா குணதிலகாவும், உபுல் தரங்காவும் களமிறங்கினர். குணதிலகா 13 ரன்கள் மட்டுமே எடுத்து பும்ரா பந்தில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சதீரா சமரவிக்ரமா 42 ரன்களிலும், தரங்கா 95 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அப்போது இலங்கை அணி 27.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து களமிறங்கியவர்கள் இந்திய அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் இலங்கை அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி பந்துவீச்சில் குல்தீப் யாதவ், சஹால் தலா 3 விக்கெட்களும், பாண்டியா 2 விக்கெட்டும், பும்ரா, புவனேஷ்வர் குமார் தலா 1 விக்கெட்டும் விழ்த்தினர். சஹால் வீசிய 10 ஓவர்களில் 3 மேய்டன் ஓவர்களும் அடங்கும். 

அதைத்தொடர்ந்து 216 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். முந்தைய போட்டியில் இரட்டை சதம் அடித்த ரோகித் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். அதன்பின் தவானுடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினார். மூன்று விக்கெட் வீழ்த்திய இந்தியாவின் குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார். தொடர்நாயகன் விருதை ஷிகர் தவான் தட்டிச்சென்றார். 

அடுத்ததாக இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளன. முதல் டி20 போட்டி, வருகிற 20-ம் தேதி கட்டக்கில் நடைபெறுகிறது. முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் இந்திய அணி 1-0 என கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018