ரஹானேவின் பேட்டிங் ‘பார்ம்’ பெரிய பிரச்சினை இல்லை: கங்குலி

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட இருக்கிறது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் ஜனவரி 5-ந் தேதி தொடங்குகிறது.

இந்த போட்டி தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள பேட்ஸ்மேன் ரஹானேவின் (கடைசி 5 இன்னிங்சில் 17 ரன்கள்) ஆட்ட திறன் (பார்ம்) மோசமாக இருப்பது குறித்து முன்னாள் கேப்டன் கங்குலியிடம் கேட்ட போது கூறியதாவது:-ரஹானேவின் ஆட்ட பார்மை நான் பெரிய பிரச்சினையாக நினைக்கவில்லை.

அவர் தரமான வீரர். விராட் கோலி, ரஹானே, புஜாரா, முரளி விஜய் ஆகியோர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நன்றாக விளையாடி இருக்கிறார்கள். மீண்டும் அவர்கள் சிறந்த வீரர்களாக தென்னாப்பிரிக்கா செல்வது நல்ல விஷயமாகும்.

தற்போதைய இந்திய அணியின் பந்து வீச்சு சிறந்ததா? இல்லையா? என்பதை நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். உமேஷ் யாதவ் பந்து வீச்சில் வேகம் இருக்கும். புவனேஷவர் குமார் சிறப்பான பார்மில் இருக்கிறார்.

ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து தான் ஆடும் லெவன் அணியை நிர்ணயம் செய்ய முடியும். ஹர்திக் பாண்டியாவுக்கு 6-வது வீரராக களம் இறங்க போதிய வாய்ப்பு அளிக்கும் முன்பே அவர் அந்த வரிசைக்கு தகுதியானவரா? என்பதை கணிக்க முடியாது.

ரோகித் சர்மா தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வருகிறார். ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தால் நாம் ஆடும் லெவன் அணியில் கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை சேர்க்க வேண்டும். ஆடுகளம் பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருந்தால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்க்க வேண்டியது அவசியமானதாகும்.

ஷிகர் தவான் அருமையான ஆட்ட பார்மில் இருக்கிறார். முரளி விஜய் இலங்கைக்கு எதிரான தொடரில் நன்றாக விளையாடினார். இந்தியா சிறந்த அணியாகும். இருப்பினும் தென்னாப்பிரிக்கா தொடர் எளிதாக இருக்கும் என்று சொல்ல முடியாது. பேட்ஸ்மேன்கள் போதிய ரன்களை குவிக்கும் பட்சத்தில் பந்து வீச்சாளர்களால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும்.

இவ்வாறு கங்குலி கூறினார்.


Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018