மேற்கிந்திய தீவுகளை 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து

மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியுசிலாந்து அணி 5 விக்ககெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய தினம் நியூசிலாந்தில் வட பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில் இடம் பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை முதலில் துடுப்பெடுத்தாடும் படி பணித்தது.

மேற்கிந்திய தீவுகளை 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து

இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 248 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

மேற்கிந்திய அணி சார்பில், லுாவிஸ் 76 ஓட்டங்களையும், ரோவ்மென் பவல் 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுக்களையும், அஸ்டில் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து 249 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 46 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

நியூசிலாந்து அணியின் சார்பில். வேர்க்கர், 57 ஓட்டங்களையும், முன்ரோ மற்றும், டெய்லர் தலா 49 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1 க்கு 0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்கின்றது.

நியூசிலாந்திற்கு கிரிக்கெட் விஜயத்தினை முன்னெடுத்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று 20 க்கு 20 ஓவர்கள் கொண்ட போட்டித் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் டெஸ்ட் தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகளை 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து

Ninaivil

திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018