தென் ஆப்பிரிக்காவை வீழ்த்துவது இந்திய அணிக்கு அதிக சவால் அளிக்கக் கூடியதாக இருக்கும் - கவுதம் கம்பீர்

புதுடெல்லி


இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட 36 வயதான கம்பீர்  கூறியதாவது:- 


"தென் ஆப்பிரிக்க அணி தனது சொந்த மண்ணில் பலம் வாய்ந்த ஒன்றாக இருப்பதால், அதனுடனான கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கு அதிக சவால் அளிக்கக் கூடியதாக இருக்கும். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்படும் அந்த அணியை வீழ்த்த, இந்தியா மிகக் கடினமாக விளையாட வேண்டியிருக்கும்.


கடந்த இரு ஆண்டுகளாக சொந்த மண்ணில் விளையாடியுள்ள போட்டிகளில் இருந்து இந்திய அணிக்கு போதிய நம்பிக்கை கிடைத்திருக்கும் என நம்புகிறேன். சொந்த மண்ணில் அதிகம் விளையாடிய அனுபவம் இருந்தாலும், தென் ஆப்பிரிக்காவுக்கு மிகுந்த கவனத்துடனும், தன்னம்பிக்கையுடனும் இந்திய அணி செல்ல வேண்டும்.


டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, எந்தவிதமான களச் சூழலிலும் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் சொந்த மண்ணைப் போல, அந்நிய மண்ணிலும் இந்தியா சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.


ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி 10 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. டெல்லி அணிக்காக களம் காணும் கவுதம் கம்பீர் இந்த சீசனில் 8 ஆட்டங்களில் ஆடி 3 சதம், 2 அரைசதம் உள்பட 632 ரன்கள் குவித்து இருக்கிறார்.

Ninaivil

திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018