ஆட்டம் பாட்டத்துடன் நடந்த கோலி-அனுஷ்கா திருமண வரவேற்பு

புதுடெல்லி


இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி, இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வந்தனர். இவர்கள் கடந்த 11 ந்தேதி  காலையில்  இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தினர்களுக்கு கோலி தம்பதி அழைப்பு விடுத்திருந்தனர்.


இவர்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தாஜ் பேலஸ், ஸ்டார் ஹோட்டலில் நேற்று இரவு  நடைபெற்றது.   இதில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் கலந்து கொண்டு  மணமக்களை வாழ்த்தினார்.


ஆடை வடிவமைப்பாளர்  சபரேசாசி யால் வடைவமைக்கப்பட்ட ஆடைகலை  விராட் மற்றும் அனுஷ்கா அணிந்து  வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து  கொண்டனர்.


கிரிக்கெட் வீரர்கள், ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னா, கவுதம் காம்பீர் ஆகியோரும், நட்சத்திர ஓட்டல் வந்திருந்து, தம்பதிகளை வாழ்த்தினர். மற்ற இந்திய வீரர்கள், மத்திய பிரதேசத்தின் இந்தூரில் இன்று நடைபெற உள்ள இந்தியா-இலங்கை அணிகள் நடுவேயான டி20 போட்டியில் பங்கேற்க சென்றுள்ளதால் அவர்களால் இதில் பங்குபெற முடியவில்லை.


கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தம்பதிகள் மேடையை விட்டு கீழே இறங்கி வந்து பஞ்சாபி பாடலுக்கு அசத்தல் நடனமாடினர். கோலிதான் கலக்கல் நடனமாடினார் என பார்த்தால், அனுஷ்காவும் விடவில்லை. குத்தாட்டத்தில் பட்டையை கிளப்பினார். வாயில் காகிதத்தை வைத்தபடி அவர் போட்ட ஆட்டத்தால் அந்த இடம் முழுக்க ஒரே குதுகலமும் விசில் சத்தமுமாக இருந்தது.


பஞ்சாபி பாடலுக்கு தேர்ந்த ஒரு நடன கலைஞரை போலவே கோலியும் அசத்தலாக ஆடினார். நடிகையான அனுஷ்காவுக்கு நடனம் பெரிய விஷயம் இல்லை. ஆனால் கோலிக்குள் இப்படி ஒரு டான்சர் உள்ளாரா என்று வியக்கும் அளவுக்கு பெர்பெக்டாக நடனம் ஆடினார்.

Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018