27 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்களை பறிகொடுத்த இலங்கை கிரிக்கெட் அணி

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றி இருந்தது. இரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா 93 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் பெற்றது.

2-வது டி20 கிரிக்கெட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் திசாரா பெரெரா பந்து வீச்சு தேர்வு செய்தார். தொடர்ந்து ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 260 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 43 பந்தில் 12 பவுண்டரி, 10 சிக்ஸ் உடன் 118 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். லோகேஷ் ராகுல் 49 பந்தில் 5 பவுண்டரி, 8 சிக்சருடன் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து 261 ரன்கள் என்ற இலக்குடன் கலளமிறங்கிய இலங்கை அணியில் டிக்வெல்லா 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் உபுல் தரங்காவுடம், குசல் பெரெரா ஜோடி சேர்ந்து அதிரடியாக ரன்குவித்தனர். இருவரும் பவுண்டரிகளும், சிக்சர்களுமாக விளாசினர்.

பெரெரா அரைசதம் அடித்தார். அரைசதம் அடிப்பார் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தரங்கா 47 ரன்களில் சஹால் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இலங்கை அணி 145 ரன்களில் இரண்டாவது விக்கெட்டை பறிகொடுத்தது. அதன்பின் வந்தவர்கள் இந்திய அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து சொர்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை 172 ரன்களுக்கு அல் அவுட் ஆனது. இதனால் 88 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா டி20 தொடரையும் கைப்பற்றியது.

இலங்கை அணியில் டிக்வெல்லா, தரங்கா, குசல் பெரெரா ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.ஒரு சமயத்தில் 145/1 என்ற வலுவான நிலையில் இருந்த இலங்கை அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதாவது கடைசி 9 விக்கெட்களை வெறும் 27 ரன்களுக்கு பறிகொடுத்தது.

இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த ரன்களுக்கு கடைசி 9 விக்கெட்களை இழந்த அணிகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து இலங்கை அணி ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளது. முதல் இடத்தில் ஜிம்பாப்வே உள்ளது. அந்த அணி 2010-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 26 ரன்களுக்கு கடைசி 9 விக்கெட்களை பறிகொடுத்திருந்தது.

Ninaivil

திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
யாழ். உரும்பிராய்
லண்டன்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018