மொத்தமா அள்ளியது இந்தியா: வெறும் கையுடன் திரும்பிய இலங்கை!

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை இந்திய அணி, 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வென்றது. இரு அணிகள் மோதிய மூன்றாவது டி-20 போட்டி மும்பையில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி, வழக்கம் போல பேட்டிங்கில் சொதப்ப அந்த அணி, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.சுலப இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ராகுல் (4) சொதப்பல் துவக்கம் அளித்தார். கேப்டன் ரோகித் சர்மா (27), ஸ்ரேயாஸ் (30), மணீஷ் பாண்டே (32) நிலைக்கவில்லை.

தோனி நம்பிக்கை:

பின் வந்த ஹர்திக் பாண்டியா (4) சொதப்பலாக வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து வந்த தோனி, விரைவாக ரன்கள் சேர்த்து ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார்.இந்திய அணியின் வெற்றிக்கு இரண்டு ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் இலங்கையின் பிரதீப் வீசிய ஓவரில் தினேஷ் கார்த்திக் ஒரு இமாலய சிக்சர் விளாச, இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இதை தோனி தனது வழக்கமான ஸ்டைலில் பவுண்டரி விளாசி முடித்தார்.இந்திய அணி, 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி (16), தினேஷ் கார்த்திக் (18) அவுட்டாகமல் இருந்தனர்.

16வது தொடர்:

இந்த வெற்றியின் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை இந்திய அணி, 3-0 என முழுமையாக கைப்பற்றியது. இலங்கை அணி டெஸ்ட், ஒருநாள், டி-20 தொடர் என மொத்தமாக இழந்து வெறும் கையுடன் தாயகம் திரும்பியது.

* இத்தொடரை வென்ற இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி-20 என மொத்தமாக தொடர்ந்து 16வது தொடரை கைப்பற்றிய இந்திய அணி அசத்தியது.

37வது வெற்றி:

தவிர, ஒரே ஆண்டில் டெஸ்ட், ஒருநாள், டி-20 என மொத்தமாக அதிக வெற்றிகளை பதிவு செய்த அணிகள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் சாதனை (35 வெற்றி, 1999) பின்னுக்கு தள்ளி இந்திய அணி (37 வெற்றிகள், 2017) இரண்டாவது இடம் பிடித்தது.

* இப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி (38 வெற்றிகள், 2003) முதலிடத்தில் உள்ளது.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018