இன்று முதல் ரசிகா்களை சந்திக்கிறாா் நடிகா் ரஜினிகாந்த்

இன்று முதல் வருகிற 31ம் தேதி வரை நடிகா் ரஜினிகாந்த் இரண்டாம் கட்டமாக தனது ரசிகா்களை சந்திக்க உள்ளாா். இந்த சந்திப்பின் இறுதியில் அரசியலுக்கு வருவது தொடா்பான முக்கிய முடிவுகளை அறிவிக்கலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நடிகா் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்னா் ரசிகா்களுடனான சந்திப்பு ஒன்றை மேற்கொண்டாா். அந்த சந்திப்பில் 15 மாவட்ட ரசிகா்களை அழைத்து அவா்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாா். இந்நிலையில் அவா் அரசியலுக்கு வருவது தொடா்பான அறிவிப்பை வெளியிடுவாா் என்று பொிதும் எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், காலா படம் மற்றும் 2.0 படபிடிப்பு பணிகளுக்காக வெளிநாடு சென்று விட்டாா்.

இந்நிலையில், ரஜினிகாந்த் தனது இரண்டாம் கட்ட ரசிகா்களுடனான சந்திப்பை இன்று முதல் வருகிற 31ம் தேதி நடத்துகிறாா். இந்த சந்திப்பானது வழக்கம்போல கோடம்பாக்கத்தில் உள்ள அவரது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் என்றும், நாள் ஒன்றிற்கு ஆயிரம் பேரை சந்திக்க உள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

சந்திப்பின் முடிவில் அவா் அரசியல் பிரவேசம் தொடா்பான அறிவிப்பை வெளியிடுவாா் என்று ரசிகா்கள் எதிா்பாா்க்கின்றனா்.ஏற்கனவே ரஜினிகாந்தின் சகோதரா், ரஜினி அரசியலுக்கு வருவதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன.

ஜனவரி மாதத்தில் கட்சி தொடா்பான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தொிவித்திருந்தாா். அதேபோன்று காந்திய மக்கள் இயக்க தலைவா் தமிழருவி மணியனும் இதே கருத்தை முன்மொழிந்தாா். இந்நிலையில் இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018