நல்ல தலைவனுக்குரிய அத்தனை அம்சங்களும் ரஜினியிடம் உண்டு இயக்குனர் மகேந்திரன் பேச்சு

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தன் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று தொடங்கி ஆறு நாள்களுக்கு இந்த சந்திப்பு நடக்கிறது.


இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை சந்தித்து, புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். இந்த சந்திப்பின்போது மேடையில் ரஜினியுடன் இயக்குநர் மகேந்திரன், தயாரிப்பாளர் கலைஞானம் ஆகியோர் இருந்தனர்.


நிகழ்ச்சியில் பேசிய மகேந்திரன் "முள்ளும் மலரும் படத்தில் ரஜினியின் நடிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது. ரஜினி எடுக்கக் கூடிய முடிவு மிகவும் தெளிவானதாக இருக்கும்" என்றார். 


இதைத்தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் "இந்த நாளுக்காகதான் காத்துக்கொண்டிருந்தேன். கதாநாயகன் ஆக வேண்டும் என்று கனவு கூட கண்டதில்லை. ரஜினி ஸ்டைல் என்பது மகேந்திரன் அறிமுகம் செய்தது. 


என் அரசியல் அறிவிப்புகுறித்து அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். நான் அரசியலில் வருவதில் மக்களைவிட ஊடகங்களுக்குதான் ஆர்வம் அதிகம். போர்வரும் போது பார்க்கலாம் என்றேன்.போர் என்றால் தேர்தல் தானா?


அரசியலில் நான் வருவது புதிதல்ல. 1996-ம் ஆண்டு முதல் அரசியலில் உள்ளேன். வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது. வியூகம் வேண்டும். அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம். எனவே, வரும் 31-ம் தேதி என் அரசியல் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்துவேன். என்ன செய்தாலுமே ஒழுக்கமும் கட்டுப்பாடும் தான் முக்கியம்"


அரசியல் எனக்கு புதிது அல்ல; அரசியல் பற்றி தெரிந்ததால்தான் வர தயங்கிறேன். 


கடந்த முறை ரசிகர்களுடனான சந்திப்பின் தொடக்க விழாவில் இயக்குனர் முத்துராமனை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். தன்னை வைத்து வெற்றிப்படம் தந்த இயக்குனர்களை மறவாமல் அழைத்து தன்னைப் பற்றி ரசிகர்களுக்கு புரிய வைக்கிறார் ரஜினிகாந்த்.


இரண்டாவது கட்டமாக ரசிகர்களை சந்திக்கும் ரஜினிகாந்த் இன்று இயக்குனர் மகேந்திரன், தயாரிப்பாளர் கலைஞானத்தை சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தார்.


ரஜினிகாந்த் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் மகேந்திரன் கூறியதாவது:-


ரஜினி என்ன சொல்லப்போகிறார் என்பதை அறிய பொறுமை அவசியம். ரஜினியின் உயர்வுக்கு காரணம் அவரது நிதானம் தான். ரஜினியின் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.


ரஜினியிடம் இதுவரை அரசியல் குறித்து பேசியதில்லை. நல்ல தலைவனுக்குரிய அத்தனை அம்சங்களும் ரஜினியிடம் உண்டு. தமிழ்நாட்டுக்கு தற்போது தலைமை என்று யாராவது இருக்கிறார்களா? என கூறினார். 


நடிகர் ரஜினிகாந்த் குறித்து   கராத்தே தியாகராஜன்  கூறியதாவது:


சிரஞ்சீவி போல உடனடியாக ரஜினி அரசியலுக்கு வர மாட்டார், முன்னேற்பாடுகளுடன் தான் ரஜினி வருவார்.  ரஜினி, முதலில் தனது ரசிகர் மன்றங்களை ஒழுங்குப்படுத்தி முறைப்படுத்துவார்


நடிகர் ஜீவா கூறியதாவது:


ரசிகர்களிடம் வீரம் உள்ளது, ரஜினியிடம் வியூகம் உள்ளது. தூய்மையான அரசியலே ரஜினியின் நிலைப்பாடு, அதற்காகவே காலம் தாழ்த்தி வந்தார் என கூறினார்.


நடிகர் மயில்சாமி கூறியதாவது:


ரசிகர்கள் விரும்பும் இந்த தருணத்தில், ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லது நடக்கும். ரஜினி தாமதம் ஏற்படுத்துவதில் தவறு இல்லை. என கூறினார்.


நடிகர் எஸ்.வி.சேகர் கூறியதாவது:-


ரஜினியை, பாஜக அரசியலில் பயன்படுத்தி கொள்ளுமா என்பது குறித்து, அமித் ஷா தான் முடிவு செய்வார். ரஜினி அரசியலுக்கு வரலாம், ஆனால் அவரின் உடல்நிலை ஒத்துழைக்க வேண்டும் என வேண்டி கொள்கிறேன். ரஜினி எம்.எல்.ஏ-ஆகலாம், ஆனால் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை அவருக்கு வர கூடாது. என கூறினார்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018