மாகாணசபை தேர்தலையும் பிற்போட அரசாங்கம் முயற்சி

 உள்ளூராட்சித் மன்றத் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துவதுபோன்று  மாகாண சபைத் தேர்தலையும் நடத்தாமல் காலம் கடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. என்று  முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள ஸ்ரீவஜிரஷர்ம பெளத்த நிலையத்தில் நடைபெற்றது.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வடமத்திய, சப்ரகமுவ, கிழக்கு ஆகிய மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் செப்டர்பர் மாதம் நடத்த வேண்டும். எனினும் அதனையும் நடத்தாமல் காலம் தாழ்த்துவதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது.

இருந்தபோதிலும் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைத்தேர்தலை நடத்தாது பிற்போட முடியாது. ஏனெனில் மாகாண சபைகளின் முதல் அமர்வு நடைபெற்று ஐந்து வருடங்களுடன் மாகாண சபைகள் கலைந்துவிடும். அதனை எவரும் முன்வந்து கலைக்க வேண்டிய அவசியம் இல்லை.

மாகாண சபைகளுக்கான தேர்தலை பிற்போட முடியாதபோதும் அதனை முற்கூட்டி நடத்த முடியும். சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. அவ்வாறாயின் தேர்தலை பிற்போடாது முற்கூட்டி நடத்த வேண்டும்.

எவ்வாறிருந்தபோதும் தேர்தலை நடத்தக்கோரி அடுத்து வரும் வாரங்களில் கூட்டு எதிர்க்கட்சி நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது என்றார்.

Ninaivil

திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018