இங்கிலாந்து அணி 491 ரன்கள் குவிப்பு

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 327 ரன்களில் ஆட்டம் இழந்ததை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. முன்னாள் கேப்டன் அலஸ்டயர் குக் 104 ரன்களுடனும், கேப்டன் ஜோ ரூட் 49 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.


இந்த நிலையில் 3-வது நாளான நேற்றும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நீடித்தது. குறிப்பாக நங்கூரம் பாய்ச்சியது போல் நிலைகொண்டு விளையாடிய அலஸ்டயர் குக்கின் உறுதிமிக்க ஆட்டம் இங்கிலாந்து அணியை வலுவான பாதைக்கு முன்னெடுத்துச் சென்றது.


கேப்டன் ஜோ ரூட் தனது பங்குக்கு 61 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த டேவிட் மலான் (14 ரன்), ஜானி பேர்ஸ்டோ (22 ரன்), மொயீன் அலி (20 ரன்), கிறிஸ் வோக்ஸ் (26 ரன்), டாம் குர்ரன் (4 ரன்) உள்ளிட்டோர் குறிப்பிட்ட இடைவெளியில் வெளியேறினர்.


அப்போது இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 373 ரன்கள் எடுத்திருந்தது. இந்த சூழலில் 9-வது விக்கெட்டுக்கு அலஸ்டயர் குக்குடன், ஆல்-ரவுண்டர் ஸ்டூவர்ட் பிராட் கைகோர்த்தார். பிராட் அதிரடி ரன்வேட்டையில் ஈடுபட்டு ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார். அவரது ஒத்துழைப்புடன் அலஸ்டயர் குக் தனது 5-வது இரட்டை சதத்தை நிறைவு செய்தார்.


இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு சரியாக 100 ரன்களை திரட்டியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து ஜோடி ஒன்று 9-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுப்பது 91 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.


ஸ்டூவர்ட் பிராட் 56 ரன்களில் (63 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), கம்மின்ஸ் வீசிய பந்தை விளாசிய போது, ‘தேர்டுமேன்’ பகுதியில் இருந்து ஓடி வந்த உஸ்மான் கவாஜா பாய்ந்து விழுந்து கேட்ச் செய்தார். பிறகு நழுவிய பந்தை வயிற்றோடு அமுக்கி பிடித்து எழுந்தார். ‘ரீப்ளே’யில் பந்து தரையில் படுவது போலவும் தெரிந்தது. ஆனால் தெளிவு இல்லை. என்றாலும் பிராட்டுக்கு அவுட் வழங்கப்பட்டது.


3-வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 144 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 491 ரன்கள் குவித்துள்ளது. இது ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை விட 164 ரன்கள் அதிகமாகும். 10 மணி நேரத்திற்கு மேலாக களத்தில் நிற்கும் அலஸ்டயர் குக் 244 ரன்களுடனும் (409 பந்து, 27 பவுண்டரி), 15 பந்துகளை எதிர்கொண்ட ஜேம்ஸ் ஆண்டர்சன் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருக்கிறார்கள்.


முதல் மூன்று டெஸ்டுகளில் தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி, நடப்பு தொடரில் இந்த டெஸ்டில் தான் எதிரணியை விட அபாரமாக செயல்பட்டிருக்கிறது. 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.


* இங்கிலாந்து வீரர் 33 வயதான அலஸ்டயர் குக்குக்கு இது தான் (244 ரன்) டெஸ்டில் அதிகபட்ச ஸ்கோராகும். உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மெல்போர்னில் அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டவர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் 1984-ம் ஆண்டு 208 ரன்கள் எடுத்ததே இந்த மைதானத்தில் வெளிநாட்டவரின் சிறந்த ஸ்கோராக இருந்தது.


* ஆஸ்திரேலிய மண்ணில் குக்கின் 2-வது இரட்டை செஞ்சுரி இதுவாகும். ஏற்கனவே 2010-ம் ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 235 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் ஒன்றுக்கு மேற்பட்ட இரட்டை சதங்கள் அடித்த 3-வது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை குக் பெற்றார். ஏற்கனவே இங்கிலாந்தின் வாலி ஹேமன்ட் (3 இரட்டை சதம்), வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா (2 இரட்டை சதம்) ஆகியோர் இச்சாதனையை செய்துள்ளனர்.


* இந்த டெஸ்டுக்கு முன்பாக ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் 9-வது இடத்தில் இருந்த அலஸ்டயர் குக் இப்போது இலங்கையின் மஹேலா ஜெயவர்த்தனே (11,814 ரன்), வெஸ்ட் இண்டீசின் சந்தர்பால் (11,867 ரன்), வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா (11,953 ரன்) ஆகியோரை பின்னுக்கு தள்ளிவிட்டு 6-வது இடத்தை பிடித்துள்ளார். குக் இதுவரை 151 டெஸ்டுகளில் பங்கேற்று 11,956 ரன்கள் சேர்த்துள்ளார். முதல் 5 இடங்களில் சச்சின் தெண்டுல்கர் (15,921 ரன்), ரிக்கி பாண்டிங் (13,378 ரன்), காலிஸ் (13,289 ரன்), ராகுல் டிராவிட் (13,288 ரன்), சங்கக்கரா (12,400 ரன்) ஆகியோர் உள்ளனர்.


அலஸ்டயர் குக் 66 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை ‘ஸ்லிப்’பில் நின்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் கோட்டை விட்டார். அந்த பொன்னான வாய்ப்பை அலஸ்டயர் குக் 2-வது நாளில் சதமாக மாற்றினார். 3-வது நாளான நேற்று குக் 153 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது வழங்கிய கேட்ச்சை ‘ஸ்கொயர் லெக்’ பகுதியில் நின்ற சுமித் வீணடித்தார். இந்த முறை அது இரட்டை செஞ்சுரியாக மிளிர்ந்தது.


இந்த டெஸ்டுக்கு முந்தைய 10 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்காததால் குக் ஓய்வு பெற வேண்டிய தருணம் வந்து விட்டது என்று விமர்சனங்கள் கிளம்பின. இந்த இரட்டை சதம் அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு புத்துயிர் கொடுத்திருக்கிறது.

Ninaivil

திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018