கனவு நனவாகவில்லை என்றால், வருத்தப்படாதீர்கள்; ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டிய ரஜினிகாந்த்!

ராகவேந்திரா மண்டபத்தில் 5வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இதில் மத்திய சென்னை, வட சென்னை மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டிருக்கிறார்.

முன்னதாக ரசிகர்கள் மத்தியில் பேசிய அவர், தனது நடிப்பு திறமையை கண்டறிந்தவர் நண்பர் ராஜ்பகதூர். 1973ல் முதல் முதலாக சென்னை வந்தேன். சென்னை எனக்கு எப்போதும் மெட்ராஸ் தான்.தமிழ் கற்றுக் கொள், உன்னை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்கிறேன் என்று பாலச்சந்தர் கூறினார். வளர்ப்பு மகனைப் போல் என்னை பார்த்துக் கொண்டார்.

இயக்குநர்கள் சுரேஷ் கிருஷ்ணா, மணிரத்னம் என்னை சூப்பர் ஸ்டாராக மாற்றினர். இயக்குநர் ஷங்கர் என்னை இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் உயர்த்தினார். காலா படத்தில் வித்தியாசமான ரஜினியை, ரஞ்சித் உருவாக்கியுள்ளார்.2.0 படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளிவரும். அதன் பிறகு 2 மாதங்களில் காலா படம் வெளிவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உடல்நிலை சரியில்லாமல் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்தேன். அப்போது ரசிகர் ஒருவர், எனக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் சினிமா, அரசியலில் வர வேண்டும் என்று ஆசையில்லை. ஆனால் உயிரோடு வந்தால் போதும் என்ற வார்த்தைகளைக் கண்டு கண்கலங்கினேன்.

கனவு காணும் போது இருக்கும் சந்தோஷம், அது நனவாகும் போது இருக்காது. கனவு காண வேண்டாம் என்று கூறவில்லை. நேர்மையான வழியில் லட்சியத்தை அடைய முயலுங்கள்.

நாம் கண்ட கனவு நினைவாகவில்லை என்றால், அதற்காக வருத்தப்பட தேவையில்லை. குடும்பம், குழந்தைகள், தாய், தந்தை ஆகியோரை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

கனவு மெய்ப்படாத போது வருத்தம் கூடாது என்று தெரிவித்தது, ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது அரசியல் வருகையை குறித்து கருத்து தெரிவித்துள்ளாரா என்று அச்சம் கொண்டுள்ளனர்.

பல ஆண்டுகளாக ரஜினியின் அரசியல் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள், புதிய தமிழகம் பிறக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இவர்களது எதிர்பார்ப்பு சாத்தியமாகிறதா என்று நாளை தெரியும்.


Ninaivil

திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018