நேரடி கப்பல் சேவைக்கான அனுமதியினை இந்திய , இலங்கை அரசுகள் அனுமதித்தபோதிலும் கப்பல் இன்மை காரணமாக குறித்த அனுமதி கை நழுவிப்போகின்றது-ந.மதியழகன்.

ந.மதியழகன். -யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் இருந்து இந்தியாவின் சென்னைக்கு யாத்திரிகர்களை அழைத்துச் செல்வதற்கான நேரடி கப்பல் சேவைக்கான அனுமதியினை இந்திய , இலங்கை அரசுகள் அனுமதித்தபோதிலும் இரு நாட்டின் கடற்பரப்பில் பயணிகள் கப்பல் சேவையில் ஈடுபடும் கப்பல் இன்மை காரணமாக குறித்த அனுமதி கை நழுவிப்போகின்றது.

வடபுலத்தில் உள்ள சைவத்தவர்கள் இந்தியாவிற்கு யாத்திரை மேற்கொள்ள அதிக நிதிவிரயம் , நேர விரயம் ஏற்படுவதனால் காங்கேசன்துறை ஊடாக கப்பல் போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்து தருமாறு யாழ்ப்பாணம் மறவன் புலவு சச்சிதானந்தம் கடந்த சிவாராத்திரிக்கு ஆளுநர் மற்றும் இந்தியத் தரப்புக்கள் ஊடாக முயற்சித்தார். இருப்பினும் குறித்த அனுமதிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயரகம் ஊடாக குறித்த இடங்களிற்கு செல்ல நேரம் தாழ்த்தியமையினால் மேற்படி பணி கைகூடியிருக்கவில்லை.

இதனால் மார்கழித் திருவாதிரைக்கு சிதம்பரத்திற்கு செல்வதற்கான அனுமதியை பெறும் முயற்சியினை ஆளுநர் செயலகம் முன்கூட்டியே மேற்கொண்டிருந்தமையினால் இம்முறை இலங்கை அரசின் அனுமதியோடு  காங்கேசன்துறையில் இருந்து சென்னைக்கு நேரடியாக கப்பலில் செல்வதற்கான அனுமதியினை கடந்த 21ம் திகதி இந்திய அரசும் எழுத்தில் வழங்கியது. இதனால் தற்போது இரு நாட்டின் அனுமதியும் கைக்கு கிட்டிவிட்டது. இருப்பினும் தடைகள் நீங்கவில்லை.

அதாவது பெறப்பட்ட அனுமதியானது   மார்கழித் திருவாதிரைக்காக டிசம்பர் 25ம் திகதிக்கும் ஜனவரி 3ம் திகதிக்கும் இடையில் கப்பல் பயணத்திற்கான அனுமதி வழங்கப்பட்டது. இப்பயணத்திற்காக 300 வரையான யாத்திரிகர்களும் தயாராகவே இருந்தனர். இருப்பினும் புதிய பிரச்சணையால் முயற்சி கைநழுவிப்போகும் நிலமையே கானப்படுகின்றது.

அதன் அடுப்படையில் குறித்த பயணத்திற்கான பயணிகள் கப்பல் இன்மையே அந்தப் பிரச்சணையாகும். இலங்கை இந்தியப் பிராந்தியத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடும் 6 கப்பல்கள் மட்டுமே கானப்படுகின்றன. இதில் இரு கப்பல்கள் இலங்கையிலும் 4 கப்பல்கள் இந்தியாவிலும் உள்ளன. இலங்கையில் உள்ள இரு கப்பல்களில் ஒன்று 150 பேர் பயணிக்ககூடியது. இரண்டாவது 400பேர் பயணிக்கத்தக்கது. ஆனால் இரு கப்பலுமே வாடகைக்கு அமர்த்த முடியாத தன்மையே கானப்படுகின்றது. அதாவது 150 பேர் பயணிக்கும் கப்பல் மாலுமிக்கு சர்வதேச அனுமதிப் பத்திரம் கிடையாது. 400 பேர் பயணிக்கும் கப்பலோ கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்தியாவில். அந்தமான் நிக்கோவாத் தீவுகளிற்கு கொச்சின் ஊடாக மாலைதீவு உள்ளிட்ட நாடுகளிற்கு சேவையில் ஈடுபடும் கப்பல்களை குறித்த சேவைக்குப் பெறுவதானால் இனி அவர்களுடன் தொடர்பு கொண்டு அக் கப்பல்கள் முன்கூட்டியே செய்துள்ள பதிவுகளைத் தாண்டி இலங்கையின் காங்கேசன்துறைக்கு திருப்பும் முயற்சி வெற்றியளிக்குமா என்பதே கேள்விக்குறியாகவுள்ளது.

இதனால் நீண்ட முயற்சியின் பெயரில் இரு நாட்டு அரசுகளிடதும் பெறப்பட்ட அனுமதி வீண் விரயமாகவே கிடப்பில் இடவேண்டிய சூழலே எட்டுகின்றது. அதாவது கொட்டகை ஒன்றை அமைத்துவிட்டு மாட்டை வாங்கிக் கட்டும் செயல்பாட்டிற்குப் பதிலாக மாட்டை வாங்கி றோட்டில் விட்ட செயலாக அமைந்துவிட்டதோ என எண்ணத்தோன்றுகின்றது. இருப்பினும் குறித்த முயற்சி வரவேற்கப்படுகின்ற நிலையில் அடுத்து வரும் சிவாராத்திரிக்காகவேனும் முன்கூட்டியே கப்பல் மற்றும் அரச அனுமதிகள் பெறப்படுமா ? என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.

இதேநேரம் இலங்கையில் முதலிட ஆர்வம் உள்ளவர்களிற்கு ஓர் முதலீட்டுத்துறையும் இனம்கானப்பட்டுள்ளது. அதாவது இலங்கையில் சர்வதேச ஓட்டுனர் அனுமதியுள்ள ஓர் பயணிகள் கப்பல் கிடையாது என்பதனால் இத்துறையில் முதலீடு செய்வதனால் எதிர்காலத் தேவையை நிறைவு செய்யும் வாய்ப்புடன் இதனால் அதிக இலாபத்தினையும் ஈட்டக்கூடிய வாய்ப்பும் எட்டியுள்ளது. இதேநேரம் ஈழப்போராட்டம்இடம்பெற்ற காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பில் பல சர்வதேச ஓட்டுநர் அனுமதி பெற்ற மாலுமிகள் பணியாற்றினர். அவர்கள் தற்போது மறைபொருளாகவுள்ளனர். இவர்களைப் பயன்படுத்தி எதிர்காலத்திலாவது கப்பல் சேவையே நிரந்தரமாக அமைப்பதன் மூலம் காங்கேசன்துறையில் இருந்து யாத்திரிகர்கள் நேரடிசேவைக்கு வழி ஏற்படும்.

இதேநேரம் இறுதி முயற்சியாக இரண்டு ஆண்டுகளிற்குள. புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தாரகையினை குறித்த சேவையில் ஈடுபடுத்த முடியுமா ? எனவும் ஆராயப்பட்டது. அந்த முயற்சியும் கைகூடவில்லை என்றே தெரிகின்றது. ஏனெனில் வட தாரகைக்கும் நிரந்தர மாலுமி கிடையாது. அதனால் அப் படகும் இன்றுவரை கடற்படையினராலேயே செலுத்தப்படுகின்றது.இவ்வாறான நிலையில் இந்த ஆண்டின் இந்திய காங்கேசன்துறை கப்பல் சேவையின் இரண்டாவது முயற்சியும் கைநழுவும் நிலையில் மூன்றாவது முயற்சியாவது முன்கூட்டிய திட்டமிடலின்பால் இடம்பெறுமா என்ற ஏக்கம் யாத்திரிகர்கள் மத்தியில் கானப்படுகின்றது.

Ninaivil

திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018