இராணுவத்தை தண்டித்துவிட்டு நல்லிணக்கத்தை அடைய முடியாது

பழிவாங்கலின்  மூலமாக  நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்க முடியாது. இராணுவத்தை தண்டிப்பதால் தமிழ் மக்களுக்கு  தீர்வு கிடைக்கும் என்பது முட்டாள் தனமாக கருத்தாகும் என இலங்கை தேசிய மஹா சபையின்  தலைவர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார்.

இலங்கை தேசிய கா  சபையின் செய்தியாளர் சந்திப்பு கொழும்பு தேசிய நூலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட அவர் மேலும் கூறுகையில்,

நல்லிணக்கம் தொடர்பில் இன்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதிலும்  நல்லிணக்கத்தில் தென்னாபிரிக்காவின் செயற்பாடுகளை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.

தென்னாபிரிக்காவில்  இடம்பெற்ற முரண்பாட்டில் இரண்டு தரப்புக்களும்  தாம் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டன . அதன் பின்னர் இரு இனத்தவரின்  புரிந்துணர்வின் அடிப்படையில்  தென்னாபிரிக்கா நல்லிணக்கத்தில் வெற்றி கண்டது.

 ஆனால் இலங்கையில் இன்றும் தொடர்ச்சியாக இராணுவத்தை  குற்றவாளிகள் என தெரிவித்து வருகின்றனரே தவிர விடுதலைப் புலிகளின் தவறுகள் மறைக்கப்பட்டு வருகின்ற.

ஒரு தரப்பு இராணுவத்தை தண்டிப்பதன் மூலம் நல்லிணக்கத்தை உருவாக்கலாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. அவ்வாறு பழிவாங்கல் மூலமாக நல்லிணக்கத்தை உருவாக்க முடியாது.

ஆகவே இரு தரப்புக்களும்  தமது கடந்த கால சம்பவங்களை மறந்து செயற்பட வேண்டும். அடுத்த கட்டமாக தமிழ் மக்கள் தமது உரிமைகளை பெற்றுக்கொள்ள செய்யவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய வேண்டும்.

 கடந்த காலத்தில் கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் பலர் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று தமது  பிரதேசங்களில் வாழ்வதற்கான உரிமைகளை வழங்கியுள்ளோம்.

இராணுவம் மீதான குற்றங்களையும் உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும். தனிப்பட்ட குற்றவாளிகளை தண்டிக்க வேண்டியது சட்டத்தின் கடமையாகும். அதை தடுக்க முடியாது.

 எனினும் ஒரு சிலர் செய்த குற்றங்களுக்காக ஒட்டுமொத்த இராணுவத்தினரையும் தண்டிக்க நினைப்பதை தடுக்க வேண்டும். அதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்க கூடாது

அதுவே நாட்டையும்அரசாங்கத்தையும் பலப்படுத்தும் என்றார். 

Ninaivil

திரு சோமநாதர் சிவராசன் (ஓய்வுநிலை நிர்வாக கிராம அலுவலகர்)
திரு சோமநாதர் சிவராசன் (ஓய்வுநிலை நிர்வாக கிராம அலுவலகர்)
யாழ். கரவெட்டி துன்னாலை
யாழ். கரவெட்டி துன்னாலை
23 பெப்ரவரி 2018
Pub.Date: February 25, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: February 22, 2018
திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
யாழ். தென்புலோலி
கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: February 21, 2018
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
யாழ். அரியாலை
பிரான்ஸ்
19 பெப்ரவரி 2018
Pub.Date: February 19, 2018
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
யாழ். மிருசுவில்
லண்டன்
17 பெப்ரவரி 2018
Pub.Date: February 18, 2018
திருமதி சரஸ்வதி கந்தசாமி
திருமதி சரஸ்வதி கந்தசாமி
யாழ். காங்கேசன்துறை
பிரித்தானியா
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 16, 2018