உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்: விஸ்வநாதன் ஆனந்த் வெண்கலப் பதக்கம் வென்றார்

சவுதி அரேபியாவில் கடந்த வாரம் நடைபெற்ற உலக துரித செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் பட்டத்தை கைப்பற்றினார். இதையடுத்து பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டியில் ஒரு ஆட்டத்துக்கு 15 நிமிடங்களும், கூடுதலாக ஒவ்வொரு நகர்த்தலுக்கும், 10 விநாடிகளும் அளிக்கப்படும். அதே நேரத்தில் பிளிட்ஸ் போட்டியில், மூன்று நிமிடங்களும், ஒவ்வொரு நகர்த்தலுக்கு, 2 விநாடிகளும் அளிக்கப்படும். 

இந்நிலையில், ரியாத் நகரில் நடைபெற்ற பிளிட்ஸ் செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் கலந்துகொண்டார். இப்போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

விஸ்வநாதன் ஆனந்த் 21 சுற்றுகளில், ஒரே ஒரு சுற்றில் மட்டும் தோல்வி சந்தித்து, 14.5 புள்ளிகள் எடுத்து, மூன்றாவது இடத்தை ஆனந்த் பிடித்தார். உலக கிளாசிக் செஸ் சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், பிளிட்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

ரஷியாவின் செர்கே கர்ஜாகின் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இரண்டு நாட்கள் நடந்த இந்தப் போட்டியில், ஐந்து முறை உலகச் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆனந்த், முதல் நாளில், 11 ஆட்டங்களில் 7 புள்ளிகளைப் பெற்றார். இரண்டாவது நாளில், 10 ஆட்டங்களில், 7.5 புள்ளிகளைப் பெற்றார்.

Ninaivil

திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018