ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா - புனே இடையேயான போட்டி டிராவில் முடிந்தது

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

கொல்கத்தாவில் நேற்று இரவு 8:00 மணிக்கு தொடங்கிய 38-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. - எப்.சி. புனே சிட்டி அணியை எதிர்கொண்டது. 

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் புனே அணியின் மார்செலொ பெரெய்ரா முதல் கோல் அடித்தார். அதன்பின் முதல் பாதிநேர ஆட்டத்தில் எந்த கோலும் அடிக்கவில்லை.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 73-வது நிமிடம் கேரளா அணியின் மார்க் சிப்னியோஸ் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. அதன்பின் இரு அணிகளுமே மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. இதனால் இந்த போட்டி 1-1 என சமனில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதன்மூலம் புனே அணி புள்ளிபட்டியலில், 16 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது. கேரளா அணி 8 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் நீடிக்கிறது. இன்று நடைபெறும் லீக் போட்டியில் ஜெம்ஷெத்பூர் எப்.சி. - மும்பை சிட்டி எப்.சி. அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.

Ninaivil

திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்)
திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்)
யாழ். கொக்குவில்
லண்டன்
17 சனவரி 2018
Pub.Date: January 21, 2018
திரு கந்தையா இந்திரகுமார்
திரு கந்தையா இந்திரகுமார்
கொழும்பு
அவுஸ்திரேலியா
18 சனவரி 2018
Pub.Date: January 20, 2018
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
யாழ். இளவாலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 18, 2018
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திருகோணமலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 17, 2018
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
யாழ். சாவகச்சேரி
திருகோணமலை
16 சனவரி 2018
Pub.Date: January 16, 2018
செல்வி அபிநயா சண்முகநாதன்
செல்வி அபிநயா சண்முகநாதன்

வாட்டலு பல்கலைக்கழக மாணவி
18/1/2015
Pub.Date: January 15, 2018