பந்துவீச்சில் பிரித்து மேய்ந்தது இந்தியா, 286 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆல்அவுட்!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 286 ரன்கள் குவித்துள்ளது.

தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி 3 டெஸ்ட் போட்டி, 6 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று கேப்டவுனில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் பேப் டு பிளஸ்சி பேட்டிங் தேர்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து பேட்டிங்கைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி 12 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய பேப் டு பிளிசிஸ் மற்றும் டிவில்லியர்ஸ் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டு பிளிசிஸ் 62 ரன்களிலும், டிவில்லியர்ஸ் 65 ரன்களிலும் அவுட்டாகினர்.

அவர்களுக்குப் பின் வந்த வீரர்கள் பெரிதாக சோபிக்காததால் தென்னாப்பிரிக்கா அணி 286 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல்அவுட்டானது. இந்திய அணியின் சார்பாக புவனேஸ்குமார் 4 விக்கெட்களையும், அஷ்வின் 2 விக்கெட்களையும், பும்ரா, சமி மற்றும் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.

இதையடுத்து இந்திய அணி தற்போது தனது முதல் இன்னிங்சைத் தொடங்கியுள்ளது. இந்திய அணி சார்பில் முரளி விஜய் மற்றும் சிக்கர் தவான் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018