ஐந்தாவது போட்டியிலும் அவுஸ்ரேலியா அணி இனிங்ஸ் மற்றும் 123 ஓட்டங்களால் வெற்றி

இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணி மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் அவுஸ்ரேலியா அணி இனிங்ஸ் மற்றும் 123 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இதனடிப்படையில் நடைபெற்று வரும் அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான 5 டெஸ்ட் போட்டிகளின் இறுதிப்போட்டி சிட்னியில் ஆரம்பமாகியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட முடிவுசெய்து களமிறங்கியுள்ளது.

இந்நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 81.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 233 ஓட்டங்களை பெற்றுள்ள நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்துள்ளது.இதைத்தொடர்ந்து இடம்பெற்ற 2 ஆம் நாள் ஆட்டத்தில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 112.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 346 ஓட்டங்களை பெற்றுள்ளது.இப்போட்டியில் இங்கிலாந்து அணி சார்பில் ஜொய் ரூட் 141 பந்துகளில் 83 ஓட்டங்களை கூடுதலாக பெற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 67 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் 3 ஆம் நாள் ஆட்டத்தில் 157 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 479 ஓட்டங்களை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற 4 ஆம் நாள் ஆட்டத்தில் அவுஸ்ரேலியா அணி 193 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 649 ஓட்டங்களை பெற்று போட்டியை 2 ஆவது இனிங்சுக்காக இங்கிலாந்து அணியிடம் கொடுத்துள்ளது. இப்போட்டியில் அவுஸ்ரேலியா அணிசார்பில் உஸ்மன் கவயா 171 ஓட்டங்களையும் சவுன் மார்ஸ் 156 ஓட்டங்களையும் மிட்செல் மார்ஸ் 101 ஓட்டங்களையும் கூடுதலாக பெற்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து 5 ஆவது டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டத்தில் 2 ஆவது இனிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 46 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 93 ஓட்ங்களை பெற்ற நிலையில் 4 ஆம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து இன்று இடம்பெற்ற 5 ஆம் நாள் ஆட்டத்தில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 88.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 180 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி சார்பில் ஜொய் ரூட் 167 பந்துகளில் 58 ஓட்டங்களை கூடுதலாக பெற்றுள்ளார்.

போட்டியில் அவுஸ்ரேலியா அணி இனிங்ஸ் மற்றும் 123 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியின் ஆட்ட நாயகனாக அவுஸ்ரேலியா அணியின் பற் கியுமின்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Ninaivil

திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018