இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக மீண்டும் மெத்யூஸ் நியமிப்பு?

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக எஞ்சலோ மெத்யூஸ் மீண்டும் நியமிக்கப்பட கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இலங்கை அணியின் தலைமை பதவியை ஏற்பதற்கு மெத்யூஸ் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும், இதனால் இலங்கை அணியின் தலைவராக மெத்யூஸ் மீண்டும் நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அணி, தொடர் சரிவைச் சந்தித்துவருகிறது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது என அனைத்து போட்டிகளிலும் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றது.

இதன் காரணமாக அணியின் தலைமை பதவியும் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வந்தது. ஆனால், எந்த உத்திக்கும் பழைய பெறுபேறுகள் மட்டும்தான் கிடைக்கிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இலங்கை அணி, ஒருநாள் தொடரில் தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து அணியின் தலைவராக இருந்த மெத்யூஸ் பதவி விலகினார்.

அதன் பின்னர், உபுல் தரங்கா அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது, பெரேரா தலைவராக செயல்பட்டு வருகின்றார். ஆனால் இலங்கை அணி தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகின்றது.

இந்நிலையில், அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள சந்திரிகா ஹதுருசிங்கா அணிக்கு புதிய தலைவர் ஒருவரை நியமித்து 2019 உலக கிண்ண போட்டி வரையில் அவரை தலைமை பதவியில் தொடர்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

அணியின் புதிய தலைவராக மெத்யூஸ் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவர் விருப்பம் வெளியிட்டுள்ளார்.

இதனால் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக எஞ்சலோ மெத்யூஸ் மீண்டும் நியமிக்கப்பட கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018