உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையையும், தபால் மூல வாக்களிப்புக்கான வாக்காளர் அட்டையையும் விநியோகிப்பதற்கான சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தபால் மா அதிபர் குறிப்பிட்டள்ளார்.
தபால் மூல வாக்களிப்புக்கான வாக்காளர் அட்டை விநியோகத்திற்காக இம்மாதம் 11 ஆம் திகதி கிடைக்கப்பெறும் என அவர் தெரிவித்தார். தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 25ஆம், 26 ஆம் திகதிகளில் நடைபெறும்.
உத்தியோபூர்வ தபால்மூல வாக்காளர் அட்டைகளை தபால் திணைக்களத்திற்கு வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவிருக்கிறது. இம்மாதம் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தபால் மூல வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாகும்.
அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை வாக்களர் அட்டைகள் கிடைக்காதோர் அருகில் உள்ள தபால் நிலையங்களுக்கு சென்று ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.