கொட்டகலையில் இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களுக்கிடையில் மோதல்!

கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களுக்கிடையில் மோதல் சம்பவம் ஒன்று நேற்று(08) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  


கொட்டகலை பிரதேச சபைக்கு போட்டியிடும் மலையக மக்கள் முன்னணி சார்பில் பெண் வேட்பாளர் ஒருவரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஆண் வேட்பாளர் ஒருவருமே இத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


கொட்டகலையில்  இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களுக்கிடையில் மோதல்!


பெண் வேட்பாளரின் வீட்டிற்கு அருகாமையில் உள்ள குடியிருப்புகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் வாக்குகள் கேட்டு சென்றபோது தனது வீட்டிற்கு கல்லால் தாக்கினார்கள் எனவும், தான் தனிமையில் இருந்ததாகவும் கூறி பெண் வேட்பாளர் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.


இதனையடுத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் அவ்வாறான சம்பவம் ஒன்று நடக்கவில்லை.


எமது வேட்பாளருக்கு ஆதரவு தேடி அப்பகுதிக்கு வீடு, வீடாகவே சென்றோமே தவிர இச்சம்பவம் தொடர்பில் குறித்த பெண் வேட்பாளர் பொய்யான முறைபாட்டை எம்மீது சுமத்துகின்றார் என இ.தொ.காவின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். 


கொட்டகலையில்  இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களுக்கிடையில் மோதல்!


இருந்தபோதிலும் இது தொடர்பாக புகார் செய்த பெண் வேட்பாளரிடம் வினவியபோது...... 


நேற்று(08) மாலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸை சார்ந்த சிலர் இப்பகுதிக்கு வாக்காளர்களின் வீடுகளுக்கு கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு தேடி வாக்குகளை கேட்டு வந்தார்கள்.  


அச்சமயம் நான் தனிமையில் வீட்டில் இருந்தேன். எனது வீட்டிற்கு அருகில் வந்த இவர்கள் தகாத வார்த்தைகளால் என்னை திட்டி எனது வீட்டின் கதவை உடைத்தது மட்டுமின்றி வீட்டின் ஜன்னல்கள் போன்றவற்றையும் உடைத்து உள்ளே வர முயற்சித்தனர். 


இதன்போது நான் வீட்டின் சமயலறை பக்கமாக இருந்த கதவை திறந்து வெளியே சென்று விட்டேன் என தெரிவித்தாா். 


இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குறித்த ஆண் வேட்பாளரிடம் வினவியபோது,  நான் பிரச்சார நடவடிக்கைக்காக  நேற்று(08) மாலை எங்கும் செல்லவில்லை.


எனது ஆதரவாளர்கள் கொமர்ஷல் பகுதியில் உள்ள வீடுகளுக்கு எனக்கு ஆதரவினை தேடி சென்றிருக்கலாம். ஆனால் இவ்வாறான சம்பவம் ஒன்று நடந்ததாக தனக்கு தெரியாது. 


கொமர்ஷல் பகுதி மக்களின் ஆதரவினை தன்வசம் வைத்துக்கொள்ள இந்த பெண் வேட்பாளர் தனது வீட்டிற்கு தானே கல்லை அடித்துக்கொண்டு வேட்பாளரான என்மீது பொலிஸ் நிலையத்தில் புகார் செய்திருக்கின்றமை வியப்புக்குரிய விடயமாகும். 


எது எவ்வாறா இருந்தாலும், இச்சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொள்ளும் திம்புள்ள பத்தனை பொலிஸார் எவ்வரையும் இதுவரை கைது செய்யவில்லை. 


சம்பவத்தில் ஈடுப்பட்டதாக சொல்லப்படும் இரு தரப்பினரையும் பொலிஸ் விசாரணைக்காக வரவழைத்துள்ளதாக பொலிஸ் தரப்பினர் தெரிவித்தனர்.

Ninaivil

திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018