மூன்று வருடமாகியும் நீதி எங்கே; சுனில் ஹந்துநெத்தி விசனம்

ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிபீடத்திற்கு வந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள போதிலும், படுகொலைகளை அரங்கேற்றியவர்களுக்கு இதுவரை தண்டனை வழங்கப்படவில்லை என ஜே.வி.பி விசனம் வெளியிட்டுள்ளது.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வீட்டிற்கு அனுப்பி ரணில் – மைத்திரி அரசாங்கத்தை உருவாக்கிய மக்களுக்கே இன்று தோல்வி ஏற்பட்டிருப்பதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.


மாத்தறை – தெனியாய பிரதேசத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.


இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி


“ராஜபக்ச குடும்பம் வெளியேற்றப்பட்டு மூன்று வருடங்களாகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த நாளாகும். ரணில் – மைத்திரி அரசாங்கம் ஆட்சிக்குவந்து என்ன கூறியது? ராஜபக்சவின் ஆட்சி முடிவுறுத்தப்பட்டு நல்லாட்சி கொண்டுவரப்பட்டதாக கூறினார்கள். திருடர்களை கைது செய்வோம், நாட்டிலிருந்து வெளியேறாதபடி விமான நிலையத்தை மூடுவோம் என்று ஜனாதிபதி கூறினார். ஆனால் அதிகாலை மத்திய வங்கியில் கொள்ளையிட்டார்கள்.


ஊடகவியலாளர்கள் படுகொலை, கடத்தப்பட்டார்கள். போத்தல ஜயந்த கடத்திச்செல்லப்பட்டு கை,கால்களை உடைத்தார்கள். லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலும் வெளியில் எடுக்கப்பட்டது. மூன்று வருடங்களாகின. குழி தோண்டப்பட்டதே மிகுதி. தாஜுடீன் கொலை செய்யப்பட்டார். விபத்தில் அல்ல, கடத்திச் சென்றே படுகொலை செய்யப்பட்டதாக பகுப்பாய்வு அறிக்கை கூறியது. ரத்துபஸ்வல மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ஆனால் நீதி நிலைநாட்டப்படவில்லை.


ராஜபக்சவை தோற்கடித்த மக்களுக்கே இன்று தோல்வி ஏற்பட்டுள்ளது. அன்றும், இன்றும் தேங்காய், அரிசி விலைகள் உயர்ந்து காணப்படுகின்றன. அன்று மஹிந்தவுக்கு திருடன் எனக்கூறியவர்கள் இன்று ரணிலை திருடன் என அழைக்கின்றனர். ஒன்றிணைந்த எதிரணி அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்கிறது. மஹிந்த ராஜபக்ச இன்றுவரை அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் மீது மூன்று வருடங்களிலும் எதிராக வாக்களிக்கவே இல்லை” என்றார்.

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019